என் மலர்
சேலம்
- ஏற்காட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
- குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
ஆங்கில ஆசிரியர்
இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஹரிஹரன் பணிபுரிந்து வருகிறார். அவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்தனர்.
காழ்ப்புணர்ச்சி
இந்த சம்பவம் குறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் பாஸ்கர், எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர் தன்னுடைய சொந்த செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிரியர் ஹரிஹரன் மீது காழ்ப்பு ணர்ச்சியின் காரணமாக புகார் கொடுத்ததால் மாவட்ட நிர்வாகம் ஹரி ஹரனை சஸ்பெண்டு செய்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
போராட்டம்
இதனால் இந்த சம்பவத்தை தீர விசாரித்து, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்த தலைமை ஆசிரியர் பாஸ்கரிடம் விசா ரணை நடத்த வேண்டும். பாஸ்கர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த தவறும் செய்யாத ஆசிரியர் ஹரிஹரனை பணியில் சேர்க்க வேண்டும் என்றும், இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் வந்து விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு உதவி கல்வி அலுவலர் மற்றும் ஏற்காடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் உயர் அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
இதையடுத்து மாலை 4.45 மணி அளவில் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், சம்பவ இடத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் சுமார் 1 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைமை ஆசிரியர்
மீது புகார்
அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் நடவடிக்கைகள் தான் சரியில்லை. அவரது சொந்த வெறுப்பு காரணமாக தான் ஹரிஹரன் ஆசிரியர் மீது புகார் கொடுத்து விட்டார்.
ஹரிஹரனை மீண்டும் அதே பள்ளியில் பணிய மர்த்த வேண்டும். இல்லை என்றால் இந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்க ளையும் மாற்றிவிடுங்கள் என்று பொதுமக்கள் கூறினர். அதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், தலைமை ஆசிரி யர் மீது தாங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை எழுத்து மூலமாக புகாராக கொடுங் கள் என்றார். இதையடுத்து பொதுமக்கள் தங்களது புகாரை மனுவாக எழுதி அவரிடம் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது.
சேலம்:
கோடை வெயில் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் கடந்த 14-ந் தேதி அதிகபட்சமாக 105.4 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் 2-வது முறையாக வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 105.08 டிகிரி பதிவாகி யுள்ளது. வரும் காலங்க ளில் வெப்பநிலை அதிக ரிக்கும் என்பதால் வெயி லின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரு கிறார்கள். பகல் நேரங்களில் பயணத்தை தவிர்த்து மாலை நேரங்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
இதேபோல இளநீர், சர்பத் கடைகள், கம்மங்கூழ், கரும்புச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது வெயில் சீசன் தொடங்கி விட்ட நிலையில் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. அதேபோல மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வெயில் தாக்கம் உள்ளது. பகலில் கடுமையான வெப்பம் காரணமா கவும் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாகவும் தூங்க முடியாமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்திலும் காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது.
வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிக்க பொது மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கின்றன. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கட்டிட தொழிலாளி பழனிசாமி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- பிரேமாவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சீனிவாசன்- கனகரத்தினம் தம்பதி முறைப்படி தத்தெடுத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பழனிசாமி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பழனிசாமியின் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை என்பதால் பிரேமா பூ கட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது உறவின ரான சேலம் அரியாகவுண்டம் பட்டியை சேர்ந்த சீனிவாசன்-கனக ரத்தினம் தம்பதிக்கு, திருமணமாகி 25 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை.
இதையடுத்து, கண்ணன் மூலம், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முயன்றனர். இதுகுறித்து கண்ணன், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பிரேமாவிடம் கூறியுள்ளார். உனக்கு பிறக்கும் குழந்தையை உறவினர்கள் தத்தெடுக்க ஆர்வமாக இருக்கி றார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த மாதம் பிரேமாவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சீனிவாசன்- கனகரத்தினம் தம்பதி முறைப்படி தத்தெடுத்தனர். ஆனால், குழந்தையை பிரிந்து இருக்க முடியாமல், பிரேமா தவித்து வந்துள்ளார். குழந்தையை மீண்டும் பெற்றுத் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் முறையிட்டனர். இதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து, குழந்தை தத்தெடுப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே, குழந்தையை கொடுத்த தம்பதியினரையும், தத்தெடுத்த தம்பதியினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தத்தெடுத்த தம்பதி, குழந்தையை ஒப்படைத்தனர்.
பிரேமா மகிழ்ச்சியுடன் குழந்தையை வாங்கிச் சென்றார். ஒரு மாதம் பாசமாக வளர்த்த குழந்தையை திருப்பிக் கொடுத்த கனக ரத்தினம் கண்ணீர் விட்டு அழுதது, அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
- ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
- கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
சேலம்:
சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
- தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
சிவாலயங்களில் கோடை காலங்களில் தாராபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சிவ லிங்கத்தின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிடுவார்கள். அந்த கலயத்திற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள்.
அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத்தில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இவ்வாறு ஜல தாரை வைப்பதால் சி வலிங்கம் குளிர்விக்கப்பட்டு மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்கலாம், இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது நம்பிக்கை.
அதன்படி ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்படும் வெயில் கொடுமையினை தணிக்க சேலம் உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதருக்கு தாரா பாத்திரத்தில் அபிசேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கரபுரநாதர் கோவில் மூலவர் சிவலிங்கத்தின் மீது தாராபிசேகம் செய்யப்பட்டது. அதன்படி தாராபாத்திரம் அமைக்கப்பட்டு அதில் வெட்டிவேர், பன்னீர், விளாமிச்சவேர், ஏலக்காய், சாதிகாய், பச்சை கற்பூரம் உள்ளிட்ட பலவிதமான மூலிகைகளை கலந்து வைத்து இடைவிடாமல் சுவாமி மீது சொட்டு சொட்டாக நீர் விழுமாறு அமைக்கப்பட்டு அபிஷேகம் நடந்து வருகிறது.
இவ்வாறு இடைவிடாமல் அபிஷேகம் செய்யும்போது நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி, அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தினசரி நடைபெறும் இந்த அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளிக்கலாம் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள். அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.
தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
- நீர்வரத்தை விட அணையின் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- நேற்று 102.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 102.38 அடியாக குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
நேற்று காலை விநாடிக்கு 948 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை மேலும் சரிந்து விநாடிக்கு 797 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட அணையின் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 102.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 102.38 அடியாக குறைந்தது.
- 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார்.
- 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று இரவு (திங்கட்கிழமை) அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே சமயபுரம் வந்து குவிய தொடங்கினர்.
முன்னதாக தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்தில் புனித நீராடி, அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைகேட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
தேரோட்டத்தை தொடர்ந்து வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஏராள மானோர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் இறந்தனர்.
- இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு ஏராள மானோர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் இறந்தனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்க ளாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் நேற்று 523 பேர் பெருந் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொது சுகா தாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட புற நோயாளிகள், உள் நோயா ளிகள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாய மாக்கப்பட்டது.
இதையடுத்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தனர். ஒரு சிலர் முக கவசம் அணி யாமலும் வந்ததால் மாநக ராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் நீதிமன்ற வளா கத்தின் முன்பு நின்று அங்கு வருபவர்களை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனர்.
முக கவசம் அணியாமல் வந்தால் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவ தால் மாவட்ட நிர்வாகம் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
- சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு
- தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
31 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மொத்தம் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
முக கவசம்
நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார்
- எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார்.
ேசலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கொத்தாம்பாடி பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி சித்ரா (வயது 38). இந்த தம்பதியின் 16 வயது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சித்ரா, இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார். அதன் பிறகு பள்ளியின் வகுப்பாசிரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காலை 10.50 மணிக்கு உங்களுடைய மகளின் புத்தக பை மட்டும் வகுப்பறையில் உள்ளது. உங்களின் மகளை காணவில்லை என்று அதே பள்ளியில் படித்து வரும் என மூத்த மகளிடம் தெரிவித்தார்.
இதை அறிந்ததும் நாங்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது உறவினர் வீட்டில் தேடி பாருங்கள் என கூறினர். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடினோம். ஆனால் மகள் அங்கு இல்லை.
இந்த நிலையில் ெகாத்தாம்பாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் என்பவர் எனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் அறிந்தோம்.
இதையடுத்து நாங்கள் சம்பவத்தன்று இரவு ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுக்க சென்றோம். ஆனால் போலீசார் மறுநாள் காலையில் வருமாறு கூறினார்கள். மறுநாள் காலையில் சென்றோம். அன்று மாலை வரை காத்திருக்க வைத்து விட்டு, பின்னர் பள்ளி பெத்தநாயக்கன்பாளை யத்தில் உள்ளது, எனவே ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என போலீசார் கூறினர்.
இதையடுத்து நான் அங்கு சென்று புகார் அளித்தேன். 3-ந்தேதி அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நகலை பெற்றுக்கொண்டேன். கடத்தப்பட்ட எனது மகள் பற்றி இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே எனது மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சித்ரா அதில் கூறியிருந்தார்.
- நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
- இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.
சேலம்:
நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 189 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.
தடையில்லா மின்சாரம்
இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 28 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 189 முதன்மை கண்காணிப் பாளர்கள், 189 துறை அலுவலர்கள், 3430 அறை கண்காணிப் பாளர்கள், 210 ஆசிரிய ரல்லா பணியாளர்கள் மற்றும் தேர்வுமையங்களை கண்காணிக்கும் பொருட்டு முதுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 250 ஆசிரியர்கள் பறக்கும் படைக்குழுக்களாகவும் என பல்வேறு நிலைகளிலும் தேர்வு பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்க ளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமூக அறிவியல் தேர்வு
5-வது நாளான இன்று அறிவியல் பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விைன மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதினர். தொடர்ந்து வருகின்ற 20-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளான அன்று சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது.
இந்த பாடத்தை படிக்கும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் விடுமுைற விடப்பட்டுள்ளது.
முழுவாண்டு விடுமுறை
வருகிற 20-ந்தேதி மதியம் 1.15 மணி அளவில் தேர்வு முடிவடைந்ததும், மாணவ- மாணவிகளுக்கு முழுவாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 429 மனுக்கள் பெறப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 429 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.






