என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.08 லட்சம்  நல  உதவிகள்
    X

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.08 லட்சம் நல உதவிகள்

    • சேலம்‌ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள்‌, குடிநீர்‌ வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள்‌ மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து 429 மனுக்கள்‌ பெறப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 429 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டன.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    Next Story
    ×