என் மலர்
நீங்கள் தேடியது "Villagers struggle கிராம மக்கள் போராட்டம்"
- ஏற்காட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
- குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
ஆங்கில ஆசிரியர்
இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஹரிஹரன் பணிபுரிந்து வருகிறார். அவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்தனர்.
காழ்ப்புணர்ச்சி
இந்த சம்பவம் குறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் பாஸ்கர், எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர் தன்னுடைய சொந்த செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிரியர் ஹரிஹரன் மீது காழ்ப்பு ணர்ச்சியின் காரணமாக புகார் கொடுத்ததால் மாவட்ட நிர்வாகம் ஹரி ஹரனை சஸ்பெண்டு செய்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
போராட்டம்
இதனால் இந்த சம்பவத்தை தீர விசாரித்து, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்த தலைமை ஆசிரியர் பாஸ்கரிடம் விசா ரணை நடத்த வேண்டும். பாஸ்கர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த தவறும் செய்யாத ஆசிரியர் ஹரிஹரனை பணியில் சேர்க்க வேண்டும் என்றும், இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் வந்து விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு உதவி கல்வி அலுவலர் மற்றும் ஏற்காடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் உயர் அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
இதையடுத்து மாலை 4.45 மணி அளவில் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், சம்பவ இடத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் சுமார் 1 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைமை ஆசிரியர்
மீது புகார்
அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் நடவடிக்கைகள் தான் சரியில்லை. அவரது சொந்த வெறுப்பு காரணமாக தான் ஹரிஹரன் ஆசிரியர் மீது புகார் கொடுத்து விட்டார்.
ஹரிஹரனை மீண்டும் அதே பள்ளியில் பணிய மர்த்த வேண்டும். இல்லை என்றால் இந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்க ளையும் மாற்றிவிடுங்கள் என்று பொதுமக்கள் கூறினர். அதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், தலைமை ஆசிரி யர் மீது தாங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை எழுத்து மூலமாக புகாராக கொடுங் கள் என்றார். இதையடுத்து பொதுமக்கள் தங்களது புகாரை மனுவாக எழுதி அவரிடம் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






