என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலு வலர்கள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
    • ஒரு வாரமாக சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தேகப்படும்படி கேட்பா ரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலு வலர்கள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் எந்நேரமும் பர பரப்பாக இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தேகப்படும்படி கேட்பா ரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அலுவலர்கள் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலை அடுத்து வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த காரை சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் சந்தேகப்படும்படி பொருட் கள் ஏதும் இல்லாததால் பதிவு என் கொண்டு காரின் உரிமையாளர் யார்? என்றும் கலெக்டர் அலுவலகத்திற்குள் எப்போது கொண்டு வரப் பட்டது என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் பழுது ஏற்பட்டதால் வாகனம் இயக்க முடியாத சூழல் இருந்ததாகவும் அதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டதாகவும், வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வருவதாவும் நேரு தெரிவித்தார். இதை அடுத்து அந்த வாகனத்தை உரிமையாளரிடம் இங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு போலீசார் கூறினர்.

    • ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • விவசாயிகள், சந்தைக்கு குறைந்த அளவில் செம்மறி ஆடுகளை கொண்டு வந்தனர்.

    சேலம்:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் மணியனூர், மேச்சேரி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, மோர்பா ளையம், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். அதன் நேற்று வார சந்தை நடைபெற்றது.

    விவசாயிகள், சந்தைக்கு குறைந்த அளவில் செம்மறி ஆடுகளை கொண்டு வந்தனர். இதனால் அதன் விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக மேச்சேரி சந்தையில் 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8500 வரை விற்பனையானது.

    கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்ப னையானது. ஆனால் இந்த வாரம் கிடு, கிடு வென கூடுதலாக விலை உயர்ந்தது.

    இது குறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறுகையில், வெயில் தாக்கத்தால் ஆடுகளுக்கு மேய்ச்சல் இல்லாததால் அதன் எடை குறைந்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க ஆடுகளை விற்க தயக்கம் காட்டுகின்றனர்.

    ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனை யாகும். தேவை அதிகரித்த நிலையில், கடும் வெயில் தாக்கத்தால் சந்தைகளுக்கு ஆடுகள் வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

    • அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    சேலம்:

    ராணுவத்தில் சேருவ தற்கான அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் ராணுவ ஆள் சேர்ப்பில் முதல் முறையாக எழுத்து தேர்வுக்கு பின்பு தான் உடற்தகுதி தேர்வு நடை பெறும் என மத்திய பாது காப்பு அமைச்சகம் கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு அறிவித்தது.

    இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்பு வோர் மார்ச் மாதம் 15-ந்தே திக்குள் பதிவு செய்ய அனும திக்கப்பட்டனர். பதிவு செய்த நபர்களுக்கு பொதுத் நுழைவு தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஷிப்ட் முறையில் இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம், நாமக்கல் இளைஞர்கள்

    இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி உள்பட சில நகரங்களி லும் புதுச்சேரி யிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்க ளில் சேலம், நாமக்கல், தரும்புரி, கிருஷ்ணகிரி மாவட்ட இளை ஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆன்லைன் வழியாக எழுதுகிறார்கள். குறிப்பாக இந்த 4 மாவட்டங்க ளிலும் இருந்தும் ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் திரளான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்

    • பாலமுருகன் (வயது 32). இவரும், குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (வயது 32). இவரும், குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, மாலை அனைவரும் மீண்டும் காரில் குப்பனூர் மலைப்பாதை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பாறை ஒன்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் ஏட்டு பாலமுருகன், அவரது மைத்துனர் தங்க ராஜ், மனைவி கவிதா, கார் டிரைவர் ஜெயமுருகன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள மல்லியக்குட்டை கிராமம், மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மல்லிகுட்டை ஊராட்சி சார்பில் குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வநாதன். சந்தோஷ். பிரபாகரன், செல்வம், சரவணன், குமார், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று 102.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 102.31 அடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 797 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 798 கன அடியானது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 102.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 102.31 அடியாக குறைந்துள்ளது.

    • ஆவின் நிறுவனத்தில் தற்போது 812 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 4,85,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்து வருகிறது.
    • 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் தற்போது 812 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 4,85,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியா ளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2023-2024) புதிய கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை தோற்றுவித்து, அந்த இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. அதன்படி 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமை யான விபரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வருகிற 27-ந்தேதி நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் காலை 10 மணிக்கு சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொது மேலாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
    • மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளா ளபுரம் வானக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை வெடித்து சிதறிய நிலையில் அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வேடப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக வெடிபொருள் சட்டம் 1884, பிரிவு-9(1)ன் கீழ் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும், இந்த வெடி விபத்து எந்த சூழ்நிலையில், எதனால் ஏற்பட்டது என்பது குறித்து வருகிற 25-ந்தேதி மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் பொது மக்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த வெடி விபத்து குறித்து விபரங்கள் தெரிந்தவர்களும், நேரில் பார்த்தவர்களும் மற்றும் சாட்சியம் அளிக்க விரும்புப வர்களும் அன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விபரங்களை பகிரங்கமா கவோ அல்லது ரகசிய மாகவோ தெரிவிக்கலா என்று கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது.
    • 20-ந்தேதியுடன் சமூக அறிவியல் பாட தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதியுடன் சமூக அறிவியல் பாட தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைகிறது.

    இந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு ஆரம்பமாகியுள்ளது.

    இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக ளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் தேர்வு நடை பெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    4-ம் வகுப்பு, 5 -ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கேள்வித்தாள் அடிப்படையில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. வருகிற 28-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு வருகிற 29-ந்தேதி முதல் விடுமுறை அளிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சாம்பல்பூர் - கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08311) நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமை களில் சாம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மாலை 6.42 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக வியாழக்கிழமை இரவு 9.40 மணிக்கு கோவை சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் கோவை - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08312) வருகிற 21-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வெள்ளிக்கி ழமைகளில் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மறுநாள் (சனிக்கிழமை) இரவு 9.15 மணிக்கு சாம்பல்பூர் ரெயில் நிலையம் சென்றடையும.

    இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்லூரி மாணவரான பிரவீன், நண்பர்களோடு நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கிராமத்தில் உள்ள படுகை அணைப் பகுதிக்கு குளிக்க சென்றார்.
    • தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த கல்லூரி மாண வரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த தோடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகு தியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவரான பிரவீன், நண்பர்களோடு நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கிராமத்தில் உள்ள படுகை அணைப் பகுதிக்கு குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரி ழந்தார். இதையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த கல்லூரி மாண வரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த தோடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதையடுத்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் நகர மன்ற தலைவர் நிர்மலா பப்பிதா உள்ளிட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரவீனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். பின்னர், முதல்-அமைச்சர் அறிவித்த 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை யினை அவரது பெற்றோரி டம் வழங்கினர். அப்போது நகர மன்ற உறுப்பினர் வக்கீல் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக, ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் நாகபுஷ்பராணிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
    • சேகர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர். தோப்பூர் பகுதியில் பிளஸ்-2 படித்த ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக, ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் நாகபுஷ்பராணிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை உதவி மருத்துவர் குணவதி மற்றும் மருந்தாளுனர் ஆகியோர் கே.ஆர்.தோப்பூர் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சேகர்(வயது 55) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் மருத்துவர் குணவதி விசாரணை நடத்தினார். அப்போது சேகர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு, கடந்த 20 ஆண்டாக நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருத்து, மாத்திரைகள் வழங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து, சேகர் சிகிச்சை அளிக்க வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர் கணவதி கொடுத்த புகாரின்பேரில், போலி மருத்துவர் சேகரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இந்த சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    ×