search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலி-25-ந்தேதி வருவாய் அதிகாரி விசாரணை
    X

    பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலி-25-ந்தேதி வருவாய் அதிகாரி விசாரணை

    • குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
    • மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளா ளபுரம் வானக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை வெடித்து சிதறிய நிலையில் அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வேடப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக வெடிபொருள் சட்டம் 1884, பிரிவு-9(1)ன் கீழ் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும், இந்த வெடி விபத்து எந்த சூழ்நிலையில், எதனால் ஏற்பட்டது என்பது குறித்து வருகிற 25-ந்தேதி மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் பொது மக்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த வெடி விபத்து குறித்து விபரங்கள் தெரிந்தவர்களும், நேரில் பார்த்தவர்களும் மற்றும் சாட்சியம் அளிக்க விரும்புப வர்களும் அன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விபரங்களை பகிரங்கமா கவோ அல்லது ரகசிய மாகவோ தெரிவிக்கலா என்று கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×