என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Exam ends on 28th"

    • தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது.
    • 20-ந்தேதியுடன் சமூக அறிவியல் பாட தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதியுடன் சமூக அறிவியல் பாட தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைகிறது.

    இந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு ஆரம்பமாகியுள்ளது.

    இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக ளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் தேர்வு நடை பெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    4-ம் வகுப்பு, 5 -ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கேள்வித்தாள் அடிப்படையில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. வருகிற 28-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு வருகிற 29-ந்தேதி முதல் விடுமுறை அளிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×