என் மலர்
சேலம்
- செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
- இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் சாலையோரங்களில் பழக்கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. 2 கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் 260 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 25 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடை உரிமையாளர்களிடம் பழங்களை பழுக்க வைப்பது தொடர்பாக அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா?
- என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சேலம்:
மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா? என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மருந்து கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கியது, பில் போடாமல் மருந்துகள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்து கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில், விதிமுறை மீறி செயல்பட்ட மருந்து கடை உரிமையாளருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- திய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி, 18-ந் மாலை இறந்து போனார். உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கடந்த 2-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வயிற்று வலியால் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 9-ந் தேதி, அந்த நபர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் தெரியவில்லை.
இதுகுறித்த புகார்களின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
- முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.
சேலம்:
தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.
மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம், கிழக்கு மேடு புது மாரியம்மன் கோவில் தெரு பகுதியைசேர்ந்த ஆணைகவுண்டர் (74). இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த பிரியா (25) என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆணைகவுண்டர், பிரவின் குமார், மகேந்திரன், பிரியா ஆகிய 4 பேர் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 26 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி வரும் 24-ந்தேதி( திங்கட்கிழமை) முதல் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக 2 சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இதர இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் மாற்று வழியாக அயோத்தியாப் பட்டணம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலையினை ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்குறிப்பிட்ட நாட்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்லும்
அனைத்து வாகனங்க ளுக்கும் சுங்க கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்கப் படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நேற்று அணையின் நீர்மட்டம் 102.38 அடியாக இருந்த நிலையில், இன்று 102.24 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1000 கன அடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 798 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 797 கன அடியாக வந்து கொண்டிருகிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 102.38 அடியாக இருந்த நிலையில், இன்று 102.24 அடியாக குறைந்துள்ளது.
- கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சின்ன சீரகாபாடி கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 73). இவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சிறையில் இருந்து வந்த பழனிச்சாமிக்கு, கடந்த 14-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
சிறை காவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
- நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .
இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
- இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.
மகுடஞ்சாவ:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (வயது 42). இவருக்கு மோகனா (25) என்ற மகளும், பிரியா (22) என்ற தங்கையும் உள்ளனர்.
இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில், இடங்கண சாலை நகராட்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 3 பேர், வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகட்ட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியதாக ஆராயி கடந்த 15-ந் தேதி சேலம் கலெக்டர் அலு வலகத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய்து றையினர், ஆராயி வீடு கட்ட வைத்திருந்த பொருட்கள், அவரது கூரை வீடு மற்றும் மரங்களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியா உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் சம்பந்த பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆராயி குடும்பத்தினர் இடங்கணசாலை வி.ஏ.விடம் மனு அளித்து சென்றனர்.
இது குறித்து ஆராயி கூறியதாவது:-
நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, தி.மு.க.,பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.
நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்:
போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்க ளின் மீது வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது, அப்போது சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி கூட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த மனுதாரர்களின் மனுக்களை வாங்கி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுக்களின் தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண அந்தந்த பகுதி உட்
கோட்ட டி.எஸ்.பி.களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார். பினனர் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் சரகத்தில் இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் போலி டாக்டர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காதல் திருமணத்தால் ஏற்படும் ஆணவக் கொலைகளை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையினர் சமூக நலத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி, செல்ல பாண்டியன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
- ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் கிராமம் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 57). தனியார் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாந்தி, தனது கணவர் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜீ தனது மனைவி சாந்திக்கு மாதந் மாதம் ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டுமென உத்தர விட்டார்.
அவரது உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் சாந்தி நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும் என மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜீ நேற்று , சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியரித்துடன் பார்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






