search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆணவக் கொலைகளை தடுக்க விழிப்புணர்வு
    X

    நெத்திமேடு போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி ராஜேஸ்வரி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். 

    ஆணவக் கொலைகளை தடுக்க விழிப்புணர்வு

    • வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சேலம்:

    போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்க ளின் மீது வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது, அப்போது சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி கூட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த மனுதாரர்களின் மனுக்களை வாங்கி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுக்களின் தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண அந்தந்த பகுதி உட்

    கோட்ட டி.எஸ்.பி.களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார். பினனர் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் சரகத்தில் இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் போலி டாக்டர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காதல் திருமணத்தால் ஏற்படும் ஆணவக் கொலைகளை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையினர் சமூக நலத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி, செல்ல பாண்டியன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×