என் மலர்
சேலம்
- கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
- தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.
இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
- ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
- இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
- வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
- செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டி சேசன்சாவடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தில் குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் மகள், 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென மாயமானான். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்பவருடன் தங்கியிருந்த வெள்ளாள குண்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி பழனியம்மாள் (32) என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெள்ளாளகுண்டம் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து பழனியம்மாைள கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-
எனக்கு 17 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். இங்குள்ள தனியார் பால் கம்பெனியில் வேலை செய்தபோது லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தேன்.
நான் வெள்ளாள குண்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்னேன். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் நான் 3 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டிற்கு வந்தேன். இந்த வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
அந்த கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் இருந்த எனக்கு, செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றேன். ஆனால் போலீசார், துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு பழனியம்மாள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது.
- சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவபெருமான் மாறுவேடமிட்ட கைலாய வாத்தியங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு சென்றார்.
அப்போது சிறுதொண்டர் நாயனார் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்ட பிறகு குழந்தை பிறந்தது. இதனை சிவபெருமானின் புராண வரலாற்று பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இக்கோவிலில் விழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி வழிபாடு செய்தனர். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும், குடும்ப பிரச்னைகள் தீறும் என்பது ஐதீகமாகும்.
இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
- மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.
அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
- கணவருடன் செல்ல விரும்பாத இளம்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார்.
- போலீசார் அறிவுரையை அறையும் குறையுமாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் பதட்டத்துடன் சென்றனர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று அப்பெண் கூறினார்.
வருவோருக்கெல்லாம் திருமணம் செய்து வைக்க இது திருமண மண்டபம் இல்லை. உங்கள் பெற்றோர் யார்? கழுத்தில் இருப்பது தாலி தானே? என போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இருவரும் விடாப்பிடியாக கூறினர்.
விசாரணையில் 24 வயதான அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த போது அங்கு பணியாற்றிய 21 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்களின் பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். எனக்கு துரோகம் செய்து விட்டாய், இனி நீ எனக்கு வேண்டாம். என்று கணவர் கூறியுள்ளார். பெற்றோரும் எந்த கெட்டபழக்கமும் இல்லாத கணவரையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வழ்க்கையை தொலைத்து விடாதே. உடனே கணவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, குடும்பம் நடத்து என்று அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால் அந்த பெண் கணவருடன் செல்லாமல், தனது மனம் கவர்ந்த காதலனை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து வைக்குமாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். ஆனால் அவரது கணவரோ, வந்தாலும் வராவிட்டாலும் கவலையில்லை. வந்தால் குழந்தைகளை கவனித்துக்கொள்ளலாம் என்றார்.
இதை தொடர்ந்து கணவருடன் செல்ல விரும்பாத இளம்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். அந்த 21 வயது இளைஞரோ, காதலியின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்றார்.
போலீசார் அறிவுரையை அறையும் குறையுமாக ஏற்றுக்கொண்ட அப்பெண் பெற்றோருடன் சென்றார். 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவர் மிகுந்த மனவேதனையுடன் வீட்டிற்கு சென்றார்.
- ராஜீ, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார்.
- மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் கிராமம் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 57). தனியார் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாந்தி, தனது கணவர் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜீ தனது மனைவி சாந்திக்கு மாதமாதம் ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டுமென உத்தர விட்டார்.
அவரது உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் சாந்தி நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும் என மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜீ, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியரித்துடன் பார்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 797 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 646 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 102.24 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 102.16 அடியாக குறைந்துள்ளது.
- இளம் பெண் அனுசுயாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.
- சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தில் நிகழ்ந்த ஆணவ படுகொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அனுசுயாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து அனுசுயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அருணபதி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக தண்டபாணி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணவ படுகொலை விவகாரங்களில் சாதிய பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொடரும் இதுபோன்ற சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு,
- மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:
ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக பிரிவு எம்.டி.சுப்பிரமணி, பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி, மேகநாதன், வக்கீல் பிரிவு ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பழனி, திருமுருகன் வசந்தம் சரவணன், மாநகர பொதுச்செயலாளர் கோபி குமரன், உடையாபட்டி பிரகாஷ், சுரேஷ் பாபு, மொட்டையாண்டி, ஓ.பி.சி பிரிவு பர்வேஷ், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார், சிவக்குமார், வரதராஜ், இளைஞரணி ராஜ்பாலாஜி, ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைவாசல்
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து இன்று காலை, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரைய்யா, வட்டாரத் தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், ஜே.பி.கிருஷ்ணா, ஆட்டையாம்பட்டி சாமி, தங்கராஜ், அருள்ஆனந்தம்,
கண்ணன், ராமர், தன்ராஜ், சிவாஜி, சசிகுமார் குருசேவ், ரவிக்குமார், முருகேசன், அழகுவேல், நேதாஜி மணிமாறன், ராஜேஷ், வெள்ளையன், கிருஷ்ணன், நந்தினி, டைலர் கணேசன், ஜெய்ஆனந்த், மணிகண்டன், ஜெயபால், செல்வமுருகன், ஆத்தூர் சம்பத் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளனர் என்பது அவர்களிடம் நடத்த ப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் 17 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 177 பேர் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






