என் மலர்tooltip icon

    சேலம்

    • தினசரி காய்கறி மார்க்கெட் வரும் 2023-24-ம் ஆண்டிற்கான தினசரி சுங்க கட்டணம் ஏலம் நடைபெற்றது.
    • கடுமையான போட்டிகளுக்கு இடையே ரூ.86.55 லட்சத்திற்கு ஏலம் முடிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வரும் 2023-24-ம் ஆண்டிற்கான தினசரி சுங்க கட்டணம் வசூலிக்க தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஏலத்தில் 20-க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர்.

    கடுமையான போட்டிகளுக்கு இடையே ரூ.86.55 லட்சத்திற்கு ஏலம் முடிக்கப்பட்டது. வரிகள் உட்பட 1 கோடியே 4 லட்சத்துக்கு ஒப்பந்ததாரர் இலஞ்சி (55) என்பவருக்கு விடப்பட்டது.

    இது சென்ற ஆண்டை விட 20 லட்சம் குறைவு என்பது குறிப்பிடதக்கது. புதிய ஒப்பந்ததாரர் வருகிற 24-ந்தேதி முதல் குத்தகை வசூல் செய்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது

    • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
    • வீராங்கனைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    சேலம்:

    தமிழக கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி கள் விளையாட்டு துறைகளில் சாதனை படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதி கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், பளு தூக்குதல், வாள்வீச்சு வீரர்களுக்கான விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கத்திலும், ஆக்கி வீரர்க ளுக்கான விடுதி கோவில்பட்டி யிலும் செயல்பட்டு வருகிறது.

    தடகளம், குத்துச்சண்டை, வாலிபால், கால்பந்து, பளு தூக்குதல், ஜீடோ வீராங்க னைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    இந்த விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு 17 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாண விகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்க லாம். இதற்கான கடைசி நாள் வருகிற 1-ந் தேதி ஆகும். இதையடுத்து சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 3-ந் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தகவலை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    • எட்டிக்குட்டை மேடு பகுதியில் பிரசித்தி பெற்ற அதிர்ஷ்ட லட்சுமி ஆலயம் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் அட்சய திருதியையை முன்னிட்டு இன்று காலை அட்சய வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே எட்டிக்குட்டை மேடு பகுதியில் பிரசித்தி பெற்ற அதிர்ஷ்ட லட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியையை முன்னிட்டு இன்று காலை அட்சய வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக ஆதிலட்சுமி அம்மனுக்கு 1008 வலம்புரி சங்கு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து லட்சுமி அழைப்பு நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிளக் நடைபெற்றது.

    பின்னர் அட்சய வாசல் திறக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மலர் சப்புரத்தில் ஆதிமகாலட்சுமி தாயார் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    யாக சாலையில் தண்டபாணி சுவாமிகள் தலைமையிலான ஸ்ரீரங்கம் பட்டாச்சாரியார்கள் சிறப்பு அக்ஷய வேள்வி பூஜை நடத்தி, பக்தர்களுக்கு கோமதி சக்கர பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.
    • திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள நங்கவள்ளி, வீரக்கல் கீழ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (55). இவர் கடந்த 15 வருடமாக தார மங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளி யாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வங்கி முன்பு நகராட்சி சார்பில் தோண்டப் பட்ட திறந்த வெளி சாக்கடையை கடக்க முயன்ற போது அவர் தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
    • வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இங்குள்ள சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. கிராமத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    நள்ளிரவு நேரத்தில் யானை வருவதை அறிந்த கிராம மக்கள், வனத்துறை யினர் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொண்டும் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    மக்கள் விரட்டும்போது, வனப்பகுதிக்குள் செல்லும் யானை, மீண்டும் நள்ளிரவு நேரத்தில் கிராமத்துக்குள் வந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வனத்துறை யினரும் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி கண் விழித்து யானையை விரட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால், தார் காட்டில் இருந்து நீதிபுரம் வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

    தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், உணவு தேடியும் யானை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் யானையை அடர் வனப்பகு திக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
    • சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள செலவடை ராஜா கோவில் அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.

    இதில் சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார். இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி இடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியா னது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 646 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 495 கனஅடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து 1000 கனஅடியாக நீடித்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 500 கனஅடியாக சரிந்தது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 646 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 495 கனஅடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரித்து வருகிறது.

    நேற்று 102.16 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.07 அடியாக சரிந்துள்ளது.

    • கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.
    • றைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன டைய விண்ணப்பிப்போர், பொதுபிரிவினர் வயது 18 முதல் 45 வரையிலும், பெண்கள் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, சிறு பான்மையினர் திரு நங்கை கள், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 55 வயது வரையிலும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    1.1.2020 அல்லது அதற்கு பிறகு வெளி நாட்டிலிருந்து தமிழ்நாடு திருப்பி யவராக இருத்தல் வேண்டும். தொழில் தொடங்கு வோருக்கு அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சமும், அதிகபட்ச திட்ட செலவு சேவை மற்றும் வணிக துறைக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

    தொழில் தொடங்கு வோரின் பங்களிப்பாக பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

    விண்ணப்பிப்போர் பாஸ்போர்ட், விசா நகல், கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிசான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் திட்ட விபரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் அல்லது தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் வார சந்தை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகள் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.

    செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

    ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகும். தேவை அதிகரித்த நிலையில், செம்மறி ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
    • சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.

    ஆலோசனை கூட்டம்

    இது தொடர்பான ஆலோ

    சனை கூட்டம் மற்றும் 1000 கையெழுத்து வாங்கி யவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.

    சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்க தலைவர் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்முருகேசபூபதி, தெய்வீக தமிழ் சங்க தலைவர் பா.ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சிக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறு வனர் சுவாமி ராமானந்த மகராஜ், பொதுச்செயலாளர் ஆத்மானந்த மகராஜ், ராசி புரம் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் கே.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ சனாதன வித்யா பீடம் மற்ரும் திருவெம்பாவை பெருவிழா கழக செயலாளர் என்.சந்திரசேகர் வரவேற்றார்.

    கவுரவிப்பு

    தெய்வீக தமிழ் சங்க நிறுவனர் வீரபாரதி செம்முனி, கன்னங்குறிச்சி விவசாயிகள் சங்கம் கவிஞர் ஆறுமுகம் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். நிகழ்ச்சியில் 1000 கையெழுத்துக்கள் பெற்ற வர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் பேசுகையில், திரு மணிமுத்தாறின் புனிதத்தை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கான கையெழுத்து இயக்கத்தில் 90வயதை தாண்டிய பெண்மணி ஆர்வத்தோடு பங்கேற்று சிறப்பாக பணிசெய்வது ஆச்சரியமாக உள்ளது. மக்களிடம் தர்மசிந்தனை அழிந்து விடவில்லை என்றார்.

    அடுத்த ஆண்டு புஷ்கரம்

    கூட்டத்தில் சேலத்தில் திருமணிமுத்தாறு பாதுகாக்க ஒருலட்சம் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்துவது, 2024-ம் ஆண்டு திருமணிமுத்தாறு புஷ்கரம் அம்மன் சிலை ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் ஸ்ரீதர் நரசிம்மன் நன்றி கூறினார்.  

    • காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங் குறிச்சியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×