என் மலர்tooltip icon

    சேலம்

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம்.
    • டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம். இந்த டாஸ்மாக் கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் மது விற்பனை செய்யப்படு வதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பார் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிமகன்களுடன் சேர்ந்து அந்த பாருக்கு பூட்டு போட்டு கோஷங்கள் எழுப்பினர். அருகாமை யிலேயே காவல் நிலையம் இருந்தும் மது விற்பனை நடைபெறுவதை போலீசார் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்குள் இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார்.
    • கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவருக்கு கடந்த 12-ந்தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மொபட்டில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார். கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ெமாபட் திருட்டு போனது. இது குறித்து மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் நைசாக மொபட்டை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அஜித்குமாரை கைது செய்தனர்.

    • சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புதுவளவு, மணியாரகுண்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 34), இவர் தனது மனைவி பார்வதியுடன் கருமந்துறையில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க, 60 ஆயிரம் பணத்துடன் வங்கிக்கு சென்றார். சலானை பூர்த்தி செய்தபோது பணத்தை பர்சுடன் அருகே வைத்தார். சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் கொடுத்த புகார்படி, கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ், (30) என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் பணத்தை மீட்டனர்.

    • கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
    • விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அருகே, கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் அளவையாளராக கோமதி யும், உதவியாளராக சிவகு மாரும் பணிபுரிந்து வரு கின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இன்று காலை விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வந்த போது, ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக வைக்கப்பட்டி ருந்த ரூ.28ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பணியா ளர்கள் வாழப்பாடி போலீ சில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது.
    • வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆத்தூர், ஏப். 23-

    சேலம் மாவட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயர்பாளையம் ஏரிக்கரை முள்காட்டில், சந்தேகத்துக்கிடமாக நின்றி ருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் கெங்கவல்லி அடுத்த 74.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை(வயது 47) என்பதும், கள்ளசாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னதுரையை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 105லிட்டர் பாக்கெட் சாரா யத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது.
    • திருமணி முத்தாற்றில் கழிவு நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர்.

    சேலம், ஏப்.23-

    சேலம் திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்ட லாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது. இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதா கவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, திருமணி முத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகை யில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். திருமணி முத்தாற்றில் கழிவு

    நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர். இதைத்தவிர மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றும் சாயப் பட்டறையை மூடி யும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்ட றைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு நீரை வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாட கைக்கு இடம் அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்றனர்.

    • அண்ணா பூங்கா, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 40.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இது 105.5 டிகிரி பாரன்ஹீட் ஆகும். மாவட்டத்தில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அனல் காற்றால், சாலையில் செல்லவே மக்கள் தயங்கினர். மாலையிலும் வெயில் தாக்கம் இருந்தது. இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

    மேலும் நேற்று 40.4 டிகிரி செல்சியஸ், வெப்பம் பதிவானது. இது 104.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

    இந்நிலையில் இரவு 9 மணிக்கு, திடீரென சேலத்தில் கோடை மழை கொட்டியது. சேலம் கலெக்டர் அலுவலகம் 4 ரோடு, அண்ணா பூங்கா, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இருந்த போதும் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் சொகுசு விடுதி, ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து ரசிக்கின்றனர். ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • விநாடிக்கு 486 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 646 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 495 கன அடியாக சரிந்தது. மேலும் இன்று சற்று குறைந்து விநாடிக்கு 486 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று 102.07 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 101.98 அடியாக சரிந்தது.

    • ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • 1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை கிராமங்கள் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீர்த்தமலை பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில், பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளியமரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் புளிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இதுமட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களிலும், தரிசு நிலங்களிலும், பாரம்பரிய முறையிலும், குறைந்த நாட்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும், சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளி மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    மலை கிராமங்களுக்கு செல்லும் வாழப்பாடி பகுதி வியாபாரிகள், விவசாயிகளிடம் புளியம் பழத்தை மேலோடுகளுடன் கொள்முதல் செய்து கொண்டு வந்து, கூலித்தொழிலாளர்களை கொண்டு ஓடு மற்றும் விதையை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளே நேரடியாகவும் விற்பனை செய்கின்றனர்.

    சேலம் மாவட்ட எல்லையிலுள்ள மலை கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் விரும்பி வாங்கி, அன்றாடம் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு புளி அறுவடை தொடங்கியுள்ளது. மரத்தில் இருந்து புளியம் பழங்களை உதிர்த்து அறுவடை செய்து, மேலோடு மற்றும் விதையை நீக்கி விற்பனை செய்வதில் விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விற்பனைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாத இறுதியில் அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தொடர்ந்து இரு மாதங்களுக்கு புளி விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×