என் மலர்
நீங்கள் தேடியது "LIQUOR SELLER ARRESTED"
- கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் குருசாமியை கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்மேடு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இடுஹட்டி பகுதியை சேர்ந்த குருசாமி என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அங்கு நின்றதும் தெரிய வந்தது. பின்பு அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது.
- வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆத்தூர், ஏப். 23-
சேலம் மாவட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயர்பாளையம் ஏரிக்கரை முள்காட்டில், சந்தேகத்துக்கிடமாக நின்றி ருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் கெங்கவல்லி அடுத்த 74.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை(வயது 47) என்பதும், கள்ளசாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னதுரையை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 105லிட்டர் பாக்கெட் சாரா யத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- கொளப்பலூரை சேர்ந்த சோளை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் கமாராஜ் நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சிறுவலூர் போலீசார் அங்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கொளப்பலூர் காமராஜ் நகரை சேர்ந்த சோளை (41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சோலகாடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மருதை மகன் செந்தில்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து 20 பாக்கெட் நாட்டு சாராயம் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த மாரப்பன் என்பவரை கைது செய்தனர்.
- 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொப்பம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமங்கலம் அருகே பண்ணாரி ராஜன்நகரை சேர்ந்த அனுமந்தன் மகன் மாரப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அருள்வாடி, பிசில்வாடி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குருபரகுண்டி 4 ரோடு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மாதேவா (வயது 50) என்பதும், கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சோளங்காபாளையம் டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு வதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் வேள ச்சேரி பட்டி யைச் சேர்ந்த ராமன் மகன் மாரிமுத்து (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி பிள்ளிக்கம்பை பகுதியில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.
அப்போது பில்லிக்கம்பை பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் (வயது 66) என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
பின்பு அவரிடமிருந்து சுமார் 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது
கரூர்
குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே மாதிரிபட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வானதிராயன்பட்டி அத்திப்பள்ளத்தை சேர்ந்த மாமுண்டி மகன் கோபால் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்."






