மது விற்றவர் கைது-25 மது பாட்டில்கள் பறிமுதல்

போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த மாரப்பன் என்பவரை கைது செய்தனர்.25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்றவர் கைது-25 மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொப்பம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமங்கலம் அருகே பண்ணாரி ராஜன்நகரை சேர்ந்த அனுமந்தன் மகன் மாரப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com