கோத்தகிரியில் மது விற்றவர் கைது

கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் குருசாமியை கைது செய்தனர்.
கோத்தகிரியில் மது விற்றவர் கைது
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில்மேடு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இடுஹட்டி பகுதியை சேர்ந்த குருசாமி என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அங்கு நின்றதும் தெரிய வந்தது. பின்பு அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com