மது விற்றவர் கைது

கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அருள்வாடி, பிசில்வாடி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குருபரகுண்டி 4 ரோடு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மாதேவா (வயது 50) என்பதும், கர்நாடகா மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் மாதேவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com