என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரகனூர் அருகேபாக்கெட் சாராயம் விற்றவர் கைது
- வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது.
- வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆத்தூர், ஏப். 23-
சேலம் மாவட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகரா ஜூக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயர்பாளையம் ஏரிக்கரை முள்காட்டில், சந்தேகத்துக்கிடமாக நின்றி ருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் கெங்கவல்லி அடுத்த 74.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை(வயது 47) என்பதும், கள்ளசாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னதுரையை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 105லிட்டர் பாக்கெட் சாரா யத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Next Story






