சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாராயம் விற்றவர் கைது
Published on

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சோலகாடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மருதை மகன் செந்தில்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து 20 பாக்கெட் நாட்டு சாராயம் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com