கோத்தகிரியில் மது விற்றவர் கைது

12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
கோத்தகிரியில் மது விற்றவர் கைது
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி பிள்ளிக்கம்பை பகுதியில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது பில்லிக்கம்பை பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் (வயது 66) என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

பின்பு அவரிடமிருந்து சுமார் 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com