என் மலர்
சேலம்
- பெரும்பாலான மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர்.
- கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர். விவசாயி களும், விவசாய கூலித்தொழிலாளர்களும், வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்க்காக விவசாயம் சார்ந்த உபதொழிலான கறவைமாடு, ஆடு, நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் பாசன நிலங்களில் மட்டு மின்றி, மானாவரி நிலங்க ளிலும், கம்பு, சோளம், உள்ளிட்ட பசுந்தீவனங்களை விவசாயிகள் பயிரிட்டு கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனர். விவசாய விளை நிலங்களில் மட்டுமின்றி, மேய்ச்சல் தரையாக பயன்ப டும் தரிசு நிலங்களிலும் செடி,கொடி உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தானாய் வளர்ந்து கிடந்தன.
இதனால், கால்நடைகளை பராமரிப்பது சுலபமாக இருந்தது. கடந்த 6 மாதத்திற்கு மேலாக கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. விலை கொடுத்து தீவனம் வாங்கி கொடுக்க வேண்டிய நிலை இல்லாதாதல் விவசாயிக ளுக்கு கால்நடை பராமரிப்பு செலவு கணிசமாக குறைந்து கூடுதல் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் விளைநிலங்களும், தரிசு நிலங்களும் காய்ந்து கருகி வருகின்றன. வெப்பம் தாங்காமல் கறவைமாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் தவித்து வருகின்றன.
வைக்கோல், கம்பு, சோளத்தட்டை மரவள்ளி திப்பி, தவிடு, மாட்டுத்தீ வனம், பிண்ணாக்கு ஆகிய வற்றை விலை கொடுத்து வாங்கி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க வேண்டிய நிர்பந்தம் விவசா யிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் பராமரிப்பு செலவு அதி கரித்துள்ளதால் விவசாயி கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.
'ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக் கத்தில் கோடை மழை பெய்ததால் தான், கால்ந டைகளை பராமரிப்பில் ஏற்பட்டுள்ள சிரமம் குறையுமென, கால்நடை வளர்த்து வரும் விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 486 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 கனஅடியாக சரிந்துள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 500 கனஅடியாக நீடிக்கிறது.
அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 486 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 101.89 அடியாக இருந்த அணை யின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 101.79 அடியாக குறைந்தது.
- குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை தொட்டு சந்திரையர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53) வெள்ளி வியா பாரியான இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வரும் வழியில் திருப்பதி கோயிலில் தரிச னம் செய்து விட்டு நேற்று காலை சேலம் திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்க ரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாகும். இதுபற்றி பாஸ்கரன் செவ்வாய் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவிகமிஷனர் வெங்கடே சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு பூடடிக்கிடந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமி ராக்களை ஆய்வு செய்து வருவதுடன் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
- 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
சேலம்:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்க ளைத் நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.
அதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதியுடன் நிறை வடைந்தது. எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வை கணினி வழியே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியி டங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) நடை பெறவுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
- சேலம் மண்டலத்தில் 1094 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன.
- முதல் கட்டமாக 40 கடைகள் பொலிவூட்டப்படுகின்றன.
சேலம்:
சேலம் மண்டலத்தில் 1094 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் முதல் கட்டமாக 40 கடைகள் பொலி வூட்டப்படுகின்றன. ஏற்காடு, கொளத்தூர் ஒன்றியம் தவிர்த்து மீதி 18 ஒன்றியத்தில் தலா 2ரேஷன் கடைகளை, மாநகராட்சி, மாநகராட்சி எல்லையில் தலா 2ரேஷன் கடைகளளை பொலிவூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ரேஷன் கடை கட்டித்தை சீரமைத்து வண்ணம் பூசுவதோடு உள், வெளிபகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல், விற்பனை முனையம் திறம்பட செயல்படுவதை உறுதிப்படுத்தல், காலி சாக்குப்பைகளை உடனுக்கு டன் சங்கத்துக்கு அனுப்புதல் வேண்டும். ரேஷன் இருப்பு பொருட்களை நுகர்வோர் அறிய, புது தகவல் பலகையில் காட்சிப்படுத்தல், தரமான பொருட்கள் வினி யோகத்தை உறுதிப்படுத்தி, மூத்த குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்ப டுத்தல், குறிப்பாக குறை களை உடனே களைவது போன்ற நடவடிக்கை மூலம், 40 ரேஷன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடைகளை, பொலிவூட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும். அவை முன்மாதிரி ரேஷன் கடை களாக செயல்பட்டு, புகார் இல்லாதபடி 100 சதவீதம் சிறப்பாக செயல்ப டுத்தப்படும், என்றனர்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67லட்சத்து 33ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.
- வயது வாரியாக பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
சேலம்:
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67.33 லட்சமாக உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவ ரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 67லட்சத்து 33ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஆண்கள் 31லட்சத்து 34ஆயி ரத்து 644 பேரும், பெண்கள் 35லட்சத்து 98ஆயிரத்து 639பேரும், மூன்றாம் பாலினத்தவர் 277 பேரும் ஆவர்.வயது வாரியாக பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 17லட்சத்து 92ஆயிரத்து 383 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள் 28லட்சத்து 65ஆயிரத்து 95பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 36ஆயிரத்து 780 பேரும், 46வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்க ளின் எண்ணிக்கை 2 லட்சத்து 33ஆயிரத்து 372 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன்.
- 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரை சந்தித்து விட்டு மனு அளித்தனர். அதன்பிறகு அவர் கூறும்போது:-
நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன். சீட்டு முடிவடையும் தருவாயில் இருக்கும் போது சீட்டு சேமிப்பு திட்டத்தின் உரிமையாளர் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் பிறகு தருவதாக கூறி என்னிடம் 3 லட்ச ரூபாயை கடந்த 2015-ம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.
இதுவரை 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது அவர் பணம் தராமல் மிரட்டுகிறார். என்ன செய்வது என்றே தெரிய வில்லை கணவனை பிரிந்து வாழும் எனக்கு குடும்பம் நடத்துவதற்கு கூட சரிவர பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்போது பக்கவாதம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
சிகிச்சைக்கு கூட தற்போது பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே என்னிடம் ஏமாற்றியவரிடம் இருந்து 3 லட்ச ரூபாயை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமையில் இன்று நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளி களிடமிருந்து 18 மனுக்கள் வரப்பெற்றன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்தி றனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல்வேறு மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 18 மனுக்கள் வரப்பெற்றன.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு தலா ரூ.83,500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 5 நபர்களுக்கு தலா ரூ.6,880 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 30 நபர்களுக்கு தலா ரூ.12,500 மதிப்பிலான செல்போன்க ளும், 5 நபர்களுக்கு தலா ரூ.7,500 மதிப்பிலான கால் தாங்கிகளும் என மொத்தம் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனை த்துத்துறை அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
- பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி குமாரசாமிபட்டி நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்தில் இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்திற்கு தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு மாதத்திற்கு எத்தனை பிரசவங்கள் நடைபெறுகிறது, பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.தென் அழகாபுரம், குமரன் நகர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை ஆய்வு செய்த செயலாளர் நலவாழ்வு மையத்திற்கு வரும் பொது மக்களுக்கு செய்ய ப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அந்த மையத்திற்கு தேவையான மருத்துவ பணியிடங்கள், அந்த மையத்தில் அளிக்கப்ப டவுள்ள சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை டீன் மணி, துணை இயக்குநர்கள் சுகாதாரம் சவுண்டம்மாள், டாக்டர்கள் ஜெமினி, யோகானந், கண்காணிப்பு பொறியாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
- இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.
இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.
மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.
- மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் மறு கரை ஓரத்தில் ஆழமான பகுதி உள்ளது.
- கோடை வெப்பத்தை தணிக்க மறுகரை பக்கத்தில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் மறு கரை ஓரத்தில் ஆழமான பகுதி உள்ளது. இதை அறியாமல் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது அந்த பகுதிக்கு செல்கின்றனர். இதில் சிலர் அந்த பகுதியில் மூழ்கி இறந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் யாரும் குளிக்க கூடாது என்பதை குறிக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மற்றும் அணையையொட்டியுள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் பலர் அங்குள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கின்றனர். சிலர் எச்சரிக்கை பலகையில் உள்ள அறிவிப்பை கண்டு கொள்ளாமல் கோடை வெப்பத்தை தணிக்க மறுகரை பக்கத்தில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.
மேலும், வாலிபர்கள் தண்ணீர் வழிந்தோடும் திண்டு மீது உட்கார்ந்து இருந்து சீறி பாயும் தண்ணீரில் குதித்து விளையாடுகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் கவனத்திற்காக ஆற்றின் கரையில் 2 எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்ததில் ஒரு எச்சரிக்கை பல கையை சேதப்படுத்தி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்த அறிவிப்பினை தெரியாத வண்ணம் செய்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆழமான பகுதியில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுப்பணித்துறை சார்பிலும், காவல் துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 4-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 4-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 495 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 486 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 101.89 அடியாக குறைந்தது.






