என் மலர்
நீங்கள் தேடியது "முதன்மை செயலாளர் ஆய்வு"
- அரசு முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் ரூ. 52.14 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மற்றும் அரசு முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50,000- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினையும்,
கோடியூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.03 லட்சம் மதிப்பீட்டில் கோடியூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 800 மரங்கன்றுகள் நடும்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆத்துக்கொ ட்டாயில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட் அமைக்கப்ப ட்டுள்ளதையும், ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தடங்கம் ஊராட்சி, இந்திரா நகர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானிய களம் என மொத்தம் ரூ.52.14 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதையும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முழுமையாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றுவதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
- மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
- பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி குமாரசாமிபட்டி நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்தில் இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்திற்கு தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு மாதத்திற்கு எத்தனை பிரசவங்கள் நடைபெறுகிறது, பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.தென் அழகாபுரம், குமரன் நகர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை ஆய்வு செய்த செயலாளர் நலவாழ்வு மையத்திற்கு வரும் பொது மக்களுக்கு செய்ய ப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அந்த மையத்திற்கு தேவையான மருத்துவ பணியிடங்கள், அந்த மையத்தில் அளிக்கப்ப டவுள்ள சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை டீன் மணி, துணை இயக்குநர்கள் சுகாதாரம் சவுண்டம்மாள், டாக்டர்கள் ஜெமினி, யோகானந், கண்காணிப்பு பொறியாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.






