என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி அருகே அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
    X

    மரங்கன்றுகள் நடும்பணிகளை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நல்லம்பள்ளி அருகே அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

    • அரசு முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ரூ. 52.14 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மற்றும் அரசு முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50,000- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினையும்,

    கோடியூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.03 லட்சம் மதிப்பீட்டில் கோடியூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 800 மரங்கன்றுகள் நடும்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ஆத்துக்கொ ட்டாயில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட் அமைக்கப்ப ட்டுள்ளதையும், ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தடங்கம் ஊராட்சி, இந்திரா நகர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானிய களம் என மொத்தம் ரூ.52.14 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதையும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முழுமையாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றுவதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    Next Story
    ×