என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Principal Secretary Survey"

    • மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
    • பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி குமாரசாமிபட்டி நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்தில் இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்திற்கு தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு மாதத்திற்கு எத்தனை பிரசவங்கள் நடைபெறுகிறது, பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபக ரணங்கள் குறித்தும், ஆய்வ கத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார்.தென் அழகாபுரம், குமரன் நகர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை ஆய்வு செய்த செயலாளர் நலவாழ்வு மையத்திற்கு வரும் பொது மக்களுக்கு செய்ய ப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அந்த மையத்திற்கு தேவையான மருத்துவ பணியிடங்கள், அந்த மையத்தில் அளிக்கப்ப டவுள்ள சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை டீன் மணி, துணை இயக்குநர்கள் சுகாதாரம் சவுண்டம்மாள், டாக்டர்கள் ஜெமினி, யோகானந், கண்காணிப்பு பொறியாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×