என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுட்டெரிக்கும் கோடை வெயில்:கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதி
  X

  வாழப்பாடியில் கட்டுத்தறியில் வைக்கோலை தீவனமாக எடுத்துக் கொள்ளும் கறவைமாடுகள்.

  சுட்டெரிக்கும் கோடை வெயில்:கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரும்பாலான மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர்.
  • கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது.

  வாழப்பாடி:

  வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர். விவசாயி களும், விவசாய கூலித்தொழிலாளர்களும், வேலைவாய்ப்பு மற்றும் வருவாய்க்காக விவசாயம் சார்ந்த உபதொழிலான கறவைமாடு, ஆடு, நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

  வாழப்பாடி பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் பாசன நிலங்களில் மட்டு மின்றி, மானாவரி நிலங்க ளிலும், கம்பு, சோளம், உள்ளிட்ட பசுந்தீவனங்களை விவசாயிகள் பயிரிட்டு கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனர். விவசாய விளை நிலங்களில் மட்டுமின்றி, மேய்ச்சல் தரையாக பயன்ப டும் தரிசு நிலங்களிலும் செடி,கொடி உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தானாய் வளர்ந்து கிடந்தன.

  இதனால், கால்நடைகளை பராமரிப்பது சுலபமாக இருந்தது. கடந்த 6 மாதத்திற்கு மேலாக கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. விலை கொடுத்து தீவனம் வாங்கி கொடுக்க வேண்டிய நிலை இல்லாதாதல் விவசாயிக ளுக்கு கால்நடை பராமரிப்பு செலவு கணிசமாக குறைந்து கூடுதல் வருவாய் கிடைத்தது.

  இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால் விளைநிலங்களும், தரிசு நிலங்களும் காய்ந்து கருகி வருகின்றன. வெப்பம் தாங்காமல் கறவைமாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் தவித்து வருகின்றன.

  வைக்கோல், கம்பு, சோளத்தட்டை மரவள்ளி திப்பி, தவிடு, மாட்டுத்தீ வனம், பிண்ணாக்கு ஆகிய வற்றை விலை கொடுத்து வாங்கி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க வேண்டிய நிர்பந்தம் விவசா யிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் பராமரிப்பு செலவு அதி கரித்துள்ளதால் விவசாயி கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.

  'ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக் கத்தில் கோடை மழை பெய்ததால் தான், கால்ந டைகளை பராமரிப்பில் ஏற்பட்டுள்ள சிரமம் குறையுமென, கால்நடை வளர்த்து வரும் விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×