என் மலர்tooltip icon

    சேலம்

    • ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 346 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 334 அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101. 79 அடியில் இருந்து 101.69 அடியாக குறைந்துள்ளது.

    • சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.
    • பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.

    இவர் ஏற்கனவே சேலம் மாநகரில் சார்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் பிரேமா வருகிற 30-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். குறிப்பாக அவர் பணியாற்றி வரும் இந்த துறை பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல், உணவுப் பொருட்களின் விலையை மேலாண்மை செய்தல், அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் போதுமான அளவு உணவுப் பொருட்கள் வழங்குதல், எளிதில் மக்கள் அணுகிப் பெறக்கூடிய வகையில் நியாயவிலைக் கடைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தி சார்பதிவாளர் பிரேமா மீது வணிக பொருளாதார குற்ற புலனாய்வுதுறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரேமா இன்னும் 5 நாளில் ஓய்வு பெறும் நிலையில், அவரை கூட்டுறவுத்துறை பதிவாளர் ரவிக்குமார், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது.
    • பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் பகுதியில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி இருந்து வருகிறது.

    தற்போது கோடை விடுமுறையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை காண குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாழப்பாடி அருகே உள்ள வைத்தியகவுண்டன்புதூர் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் பிரவீன்குமார் (வயது 18) மற்றும் அத்தனூர்பட்டியை சேர்ந்த அவரது நண்பர்கள் 7 பேர் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர்.

    பிரவீன் குமார் நீச்சல் தெரியாததால் கரையின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு கரைக்கு வந்தனர்.

    கரையில் அமர்ந்திருந்த பிரவீன்குமார் நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் நீர்வீழ்ச்சி முன்பு உள்ள நீரோடை குட்டையில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வெகுநேரமாகியும் கரை திரும்பாததால் நண்பர்கள் அவரை தேடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் குட்டையில் இறங்கி பிரவீன்குமார் உடலை மீட்டு ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இறந்த பிரவீன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பது விசாரணயில் தெரியவந்தது.

    • ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.
    • வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம், ஏப்.25 -

    சேலம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் ராஜமன்னார் (வயது 60). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.

    இந்த நிலையில் மகன்கள் இருவரும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜமன்னார், வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று காலை பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளை யாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.
    • காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் பிரிவு சார்பாக அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 15.05.2023 வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவு ள்ளது.

    பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். முகாமில் சிறந்த விளை யாட்டு வீரர்களைக் கொண்டு அந்தந்த விளை யாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முட்டை, பால் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் வீரவீதியை சேர்ந்த மருதமுத்து மகன் பரத் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வம் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20). இவர்கள் 3 பேரும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    அதே போன்று 3 பேரும் சேர்ந்து கூலிப்படையாக செயல்பட்டு சிவக்குமார் என்பவரை கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சங்கர் மகன் சசிக்குமார் என்பவர் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சவுந்திரராஜ் என்பவரை மிரட்டி ரூ.1,600 பறித்துக்கொண்டார். இவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (24). இவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள பரத், சாமுவேல், பாலமுருகன், நந்தகுமார், சசிக்குமார் ஆகிய 5 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்

    • மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம் பெற்ற வர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனும திக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைப் பகுதி களைத் தவிர பிற பகுதிகளான காவிரி ஆற்றங்கரை, சரபங்கா உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைப் பகுதி களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்களைப் பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகின்றனர். நீர்நிலைப் பகுதிகளில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடி மருந்துகள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாக தகவல் வரப்பெறுகிறது. இவ்வா றான வெடிப்பொரு ட்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடிப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர்கள் மீது காவல் துறை யின் மூலம் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். மேலும், அனுமதியின்றி வெடிப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்தோ, சட்டத்திற்குப் புறம்பான வகையில் மீன் பிடிப்பவர்கள் குறித்தோ, மீன்வளத்துறை உதவி இயக்குநரை 04298 - 244045 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427 - 2452202, 2450498, 2417341 ஆகிய தொலைபேசி எண்களிலோ, வருவாய் துறை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார்.
    • முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவரிடம் இருந்து அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாரியப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    • 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்.
    • டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி மூடப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-

    வருகின்ற 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்க டைகள் மூடப்பட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடை கள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி மூடப்பட வேண்டும். மேலும், மேற்காணும் நாளில் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கடத்தூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகள் உஷாராணி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
    • மனம் உடைந்த உஷாராணி வீட்டுக்குள் சென்று கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி வெள்ளை யகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்த லதிகாசரண் (வயது 29). இவர் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையத்தில் மீன் கடை வைத்துள்ளார். இவருக்கும் கடத்தூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகள் உஷாராணி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் உஷாராணியை வீட்டுக்கு வரும்படி அவருடைய தங்கை போன் செய்து ள்ளார். உடனே அவர், கணவரிடம் தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    அதற்கு லதிகாசரண், மீன் வாங்கி வைத்து விட்டு வருகிறேன், அதன்பிறகு செல்லலாம் என்று கூறிய தாக தெரிகிறது. இதற்கி டையே மனம் உடைந்த உஷாராணி வீட்டுக்குள் சென்று கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார். இதை பார்த்த லதிகாசரண், தூக்கில் தொங்கிய மனை வியை மீட்டு ஆட்டை யாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உஷாராணி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த உஷாராணியின் பெற்றோர், ஆட்டையாம்பட்டி போலீ சில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குப்பதிவு செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி விசாரணை நடத்தி வரு கிறார். திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், மாடுகளை விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கு மாடுகளை விற்பனை செய்துவிட்டு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி புறப்பட்டார்.

    5 ரோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை அந்த வாலிபர் பார்த்தார். வாலிபரை கண்டதும், திருநங்கைகள் பேச்சு கொடுத்தனர். அப்போது திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார். அவரை திருநங்கைகள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அதன் பிறகு சில மணி நேரம் கழித்து அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தந்தையிடம் பணத்தை கொடுத்தார். அதனை எண்ணி பார்த்த போது ரூ.1 லட்சம் மட்டும் இருந்தது. ரூ.65 ஆயிரத்தை காணவில்லை. இதைக்கண்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சேலம் விரைந்து வந்தார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு நின்ற திருநங்கைகளை அந்த வாலிபர் அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்தான், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார். அவருடன் நாங்கள் நீண்ட நேரம் செலவிட்டோம். அதற்காகத்தான் அவர் ரூ.65 ஆயிரத்தை கொடுத்தார் என்றனர்.

    உடனே போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.65 ஆயிரத்தை வாங்கி அந்த வாலிபரிடம் ஒப்படைத்தனர். அப்போது திருநங்கைகளிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர்.

    மேலும் வாலிபரிடம், இவ்வளவு பணத்தை கொண்டு போகிறோமே என்ற அச்சம் கூட இல்லாமல் திருநங்கைகளை கண்டு சபலபட்டு இருக்கிறீர்களே என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார்.
    • டி.ராஜேந்தர் அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

    நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார். அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக அவர் பேசியதாக தெரிகிறது.

    டி.ராஜேந்தரை பார்த்ததும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில், பெண் ஒருவர் தனது குழந்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்றபோது, அவரை அருகில் அழைத்து டி. ராஜேந்தர் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    பின்னர், அங்கிருந்த மக்களிடம், "எல்லாரும் பாதுகாப்பாக, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசாங்கம் கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்" என்று கூறியதோடு, தனக்கே உரிய ஸ்டைலில், "வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்" எனக் கூறினார்.

    இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தனது சொந்த வேலை காரணமாக வந்த இடத்திலும் அவருக்கே உரிய பாணியில் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ராஜேந்தருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    ×