என் மலர்
சேலம்
- தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்த வலைதளத்தில் தங்களது நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரங்களையும் இணைக்க வேண்டும்.
மேட்டூர்:
கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்கு னர் ராஜகோபால் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வலைதளத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை உள்பட 13 துறைகளில் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த வலைதளத்தில் தங்களது நில விவரங்க ளுடன், விவசாயிகளின் விவரங்களையும் இணைக்க வேண்டும். இதன்மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்ப டுத்த முடியும்.
விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பலன்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்பட நகல், வங்கி கணக்கு புத்தகங்கள், நிலப் பட்டா ஆவண நகல் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
எனவே கொளத்தூர் வட்டார விவசாயிகள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரி டம் வழங்கி, அடிப்படை விவரங்களை பதிவு செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. நேற்று விநாடிக்கு 334 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 346 அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 101.69 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 101.59 அடியாக சரிந்தது.
- சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது.
- இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள கரட்டில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்திற்கு காரணம் என்ன? மலைப் பகுதியில் ஆடு , மாடு மேய்ப்பவர்கள் பீடி, சிகரெட் துண்டுகளை வீசி சென்றனரா? அல்லது சமூக விரோதிகள் செயலா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
- சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கன்னங்குறிச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை ெசய்து கொண்டார்.
- குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடைக்கு சென்று ஜூஸ் வாங்கி வருமாறு முருகன் அவரது மனைவியை அனுப்பி உள்ளார். அவர் கடைக்கு சென்று வரு வதற்குள் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
- சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாக ஒரு கார் அங்கு நின்று கொண்டு இருந்ததை கவனித்த அவர் அருகில் சென்று விசாரித்தார்.
அப்போது காருக்குள் 6 பேர் கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது கல்லூரிக்கு காவலாளி பணிக்கு செல்வதாக கூறினார்கள்.
சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான கொடுவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் இருந்தது. அவர்கள் யாரையாவது கொலை செய்ய வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
உடனே காரில் இருந்த 5 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ேபாலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? எதற்காக வந்தார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் சேட் (வயது 70). எஸ்டேட் அதிபர்.
- உஸ்மான் சேட் மற்றும் அவரது மனைவியை மிரட்டி, 23 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் சேட் (வயது 70). எஸ்டேட் அதிபர். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி உஸ்மான் சேட்டின் மனைவி நிஷா, நாய்க்கு உணவு அளிப்பதற்காக வீட்டின் பின்புற கதவை திறந்தபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்தது.
பின்னர் கத்தி மற்றும் இரும்பு ராடை காட்டி, உஸ்மான் சேட் மற்றும் அவரது மனைவியை மிரட்டி, 23 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சாலைப்பாறை பகுதியை சேர்ந்த மணி (38), நாகலூரை சேர்ந்த சேகர் (57), மருதயன் காடு பகுதியை சேர்ந்த செல்வன் என்கிற செல்வகுமார் (41), வாழவந்தியை சேர்ந்த தங்கவேல், செங்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு வாழப்பாடி முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மணி மற்றும் சேகர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீப்பளித்தார். தங்கவேல் இறந்து விட்ட நிலையில், செல்வம், ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து தண்டனை பெற்ற 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- “ சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
- அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
சேலம்:
தமிழக சட்டசபையில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சர் பேசுகையில், " சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படு வதற்காக பொதுமக்களின் விருப்பத்திண்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு கடந்த 13-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை யில் போலீசார் திடீர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.
அப்போது மது விற்றதாக கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். வட்டமலை பகுதியில் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமை யாளர்கள் முருகையன், இளங்கோ ஆகியோரையும், நாராயணநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த சண்முகம் எனபவரையும் போலீசார் கைது செய்தனர்.
- கரியக் கோவில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 1982–-ம் ஆண்டு கரியக்கோவில் அணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
- இந்த அணையானது 53 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் ஏறக்குறைய ரூ.12 கோடி செலவில் கடந்த 1993–-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கல்ராயன் மலையின் வடமேற்கு பகுதியில் உற்பத்தியாகும் கரியக் கோவில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 1982–-ம் ஆண்டு கரியக்கோவில் அணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த அணையானது 53 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் ஏறக்குறைய ரூ.12 கோடி செலவில் கடந்த 1993–-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதே போல் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில் 67 அடி உயரத்தில் 263 மில்லியன் கனஅடி தேங்கும் விதத்தில் ஆனைமடுவு அணை கட்டப்பட்டது.
இரு அணைகளின் கட்டு மானப் பணிகளுக்கும் தமிழகத்தில் ஆழியாறு அணை, பாப்பிரெட்டிப்
பட்டி வாணியாறு அணை, ஓசூர் கலவரப்பள்ளி அணைகள் உள்ளிட்ட பல்வேறு அணைகளின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலர்கள், சிமெண்ட் கான்கீரிட் மிக்ஸர் எந்திரங்கள், லாரிகள், கம்ப்ரஸ்சர்கள் உள்ளிட்ட எந்திரங்கள், வாகனங்கள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
கடந்த 1982 முதல்
1993–-ம் ஆண்டு வரை கரியக்கோவில் மற்றும் ஆனைமடுவு அணையின் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பழைய கட்டுமான எந்திரங்களும், வாகனங்களும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து போய் விட்டன. இந்த வாகனங்களையும் எந்திரங்களையும் பழுதுநீக்கி பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், இவற்றை பராமரிக்காமல் விட்டு விட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இரு அணைகளின் முகப்பிலும் நின்று கிடக்கும் லாரிகள், ரோடு ரோலர்கள், கம்பரஸ்சர்கள், சிமெண்ட் கான்கீரிட் மிக்ஸர் உள்ளிட்ட எந்திரங்களும், பழைய வாகனங்களும் கேட்பாரற்று துருபிடித்து மண்ணாகி வருகின்றன.
துருபிடித்து கிடக்கும் கட்டுமான எந்திரங்களையும் வாகனங்களையும், பார்வையிட்டு மதிப்பீடு தயார் செய்து ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, அணை களின் முகப்பும் பொலிவு பெறும்.
எனவே, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளில் கடந்த 30 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான எந்திரங்கள் மற்றும் வாகனங்களை ஏலம் விட்டு அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரி கள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர் களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்ச மும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
சேலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் சரோஜா, மாவட்ட செயலாளர் மனோன்மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்திரி உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், உதவி கமிஷனர்கள் வெங்கடேஷ், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடந்த போராட்டம், இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது குறித்து மாநில துணைத்தலைவர் சரோஜா கூறுகையில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்லில் இதேபோல அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட தலைவர் பாண்டிமா தேவி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை மூடுவதை அரசு கைவிட வேண்டும், ஒரு ஊழியர் கூடுதல் மையங்களை சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் காலியாக உள்ள அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நடந்த நிலையில் இன்று காலையும் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கன்வாடிகளின் சாவிகளையும் அதிகாரி களிடம் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனால் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கன்வாடிகளுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மோதியது.
- விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சேலத்திற்கு, நேற்று இரவு 11 மணியளவில் தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மனோகரன் (வயது 48), திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி வெங்கடேஷ் (45) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.
தொடர்ந்து விபத்தில் பலியான மனோகரன், வெங்கடேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த விஜயகுமார், சந்தோஷ்குமார், ஹரீஷ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






