என் மலர்
சேலம்
- சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
- கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
நாமக்கல்:
கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.
காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.
சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:
கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.
அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
- தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
- மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரி பட்டியை சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
இந்த நிலையில் அதி காரியப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வசுமதி(25) என்பவருடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர்க ளுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக மணிகண்ட னுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் நண்பருடன் லோகேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் லோகேஸ்வர னின் பின் தலையில் தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே லோகேஸ்வரன் பரிதாப மாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்த னர். பின்னர் மணிகண்ட னையும் பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் தனது மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக அந்த பகுதி யினர் கூறியதால் தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து போலீசார் மணிகண்டனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு இடையே லோகேஸ்வரன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
- இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதி யான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மணிமேகலை விரு துக்கான முன்மொழிவுகளை வருகிற மே மாதம் 5-ந்தே திக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மக ளிர் திட்டம்) அலுவலகம், இரண்டாம் தளம், அறை எண் : 207, மாவட்ட ஆட்சிய ரகம், சேலம்-636 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
- 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள், இட ஒதுக்கீட்டு மீறல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அமைப்பினர் உயர் கல்வித் துறைக்கு புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்த உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து கண்ணன் உள்ளிட்ட 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது பல்கலைக்க ழகத்தின் முறைகேடுகள் குறித்து விரிவாக அவர்கள் புகார் கூறினர். மேலும் உயர் பதவியில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 3 இடங்களில் பணிபுரிந்ததாகவும் கூறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளில் உரிய தகுதி உள்ளவரை நியமிக்காமல் தகுதி இல்லாதவரை நியமித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.
- சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
- சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன், சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ஆணை வரதன், அண்ணா பூங்கா வில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் தனது வார்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும் மண்டல அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என்று கேள்விகளை எழுப்பினார்.
தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் குணா பேசுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள சுடுகாடுகளுக்கு அதிக அளவில் பிணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மயானங்களில் மின் தகன மேடை அமைக்க வேண்டும என்றார்.
அ.தி.மு.க கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் பேசுகையில், மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 3-வது முறையாக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் காரணம் என்ன?, புதிய பஸ் நிலையத்தில் தனி நபர்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளனர்.
புதிய பஸ் நிலைய பகுதியில் காலியாக உள்ள இடம் தனியாருக்கு வாட கைக்கு கொடுக்கப்படு வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
தி.மு.க கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசுகையில், கூடுதல் வரி வசூலாகும் வார்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் திருஞானம் பேசுகையில், பொன்னம்மா பேட்டை-அம்மாபேட்டை மெயின் ரோடு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் வெளியூர் பஸ்களை பைபாஸ் சாலையில் இயக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த பல்வேறு தீர்மானங்களுக்கு விளக்கம் கேட்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து கவுன்சிலர்க ளின் கேள்விகளுக்கு அதி காரிகள் மூலம் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
- சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
- சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
சேலம்:
ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக ஜெகதீஷ் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெகதீ சிடம் செல்போன் பறித்தது நாழிக்கல்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயிலில் சோதனை நடத்தினர்.
சேலம்:
சேலம் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரு கன், ஏட்டு பாலசுப்பிர மணியன் மற்றும் போலீசார் முனுசாமி, அசோக்குமார் ஆகியோர் சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயிலில் சோதனை நடத்தினர்.
கருப்பூர்ரெயில் நிலையம் அருகே ரெயில் பொது பெட்டியில் சோதனை நடத்தியதில் 5 கிலோ கஞ்சா வுடன் வந்த ஒடிசாவை சேர்ந்த படல் பெஹ்ரா (வயது22) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் ஒடிசா மாநிலம் பலாங்கீர் என்ற ரெயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருந்தார். ஈரோடு சென்று அங்கிருந்து பழனிக்கு செல்வதாக அவர் தெரி வித்தார். மேலும் அவரது செல்போனை போலீசார் சோதனை செய்த தில் அதில் கஞ்சாவை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அதே ரெயிலில் வந்த சேலம் மாவட்டம் தெற்கு நாடு ஊராட்சி சின்னகல்வ ராயன் மலை கீரை கடை பகுதியை சேர்ந்த சடையன் (51) என்பவரையும் மடக்கி பிடித்தனர். அவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தார். கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சடையன் ஆந்திரா மாநிலம் விசா கப்பட்டினம் சென்று கஞ்சாவை வாங்கி சேலத்தில் விற்க வந்ததாக தெரி வித்தார். கைதான 2 பேரிடம் இருந்தும் தலா 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.
அதன்படி, வாட்ஸ் அப்பில் லாட்டரி விற்பனை செய்ததாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சேகர் (வயது 56), தனியார் பால் நிறுவன ஊழியர் விக்னேஷ் (24) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சின்ன சேலம்- புக்கிர வாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் உள்ள கேட் பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது.
- சேலம்-விருத்தாசலம் பாதையில் நாளை இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சேலம்:
சின்ன சேலம்- புக்கிர வாரி ரெயில் நிலையங்க ளுக்கு இடையே தண்டவாள பாதையில் உள்ள கேட் பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. இதையொட்டி சேலம்-விருத்தாசலம் பாதையில் நாளை இயக்கப்படும் ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி விருத்தாச்ச லம்-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06121) நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06896) நாளை முழுவ துமாக ரத்து செய்யப்படு கிறது.
திருப்பத்தூர்-குப்பம் ரெயில்வே பாதை பச்சூர்-மூலனூர் ரெயில் நிலை யங்களுக்கு இடையே ரெயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதையொட்டி சில ரெயில் கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) நாளை (வெள்ளிக்கி ழமை) மற்றும் நாளை மறு நாள் (சனிக்கிழமை) மாற்றுப் பாதையான பெங்களூரு கண்டோன்மென்ட் வழியாக சேலம் வந்தடையும். அதா வது ஓசூர், தர்மபுரி, ஓமலூர் வழியாக சேலம் வந்தடையும். இந்த ரெயில் கிருஷ்ணரா ஜபுரம், ஒயிட்பீல்டு, மாலூர், பங்காருபேட்டை குப்பம், திருப்பூர் வழியாக செல்லாது.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்து உள்ளது.
- பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19).
- கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் சின்னவர் வீட்டுக்கு வந்தபோது, ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து சின்ன வர், உறவி னர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜெனிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நூல் பேல்களை பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது.
- ஆர்.சி.பிளான்ட் அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் நோக்கி, நூல் பேல்களை பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் ஜெய்சங்கர் (வயது 40) ஓட்டி வந்தார்.
மேட்டூர் ஆர்.சி.பிளான்ட் அருகே லாரி வந்து கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ஜெய்சங்கர் காயங்களுடன் உயிர்தப்பி னார். இந்த விபத்து காரண மாக அந்த வழியாக சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள.
- 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்களிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள. இந்த இரு கிராம மக்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இரு கோவில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு, ஏறக்குறைய ரூ.50 லட்சம் செலவில் 2 புதிய மரத்தேர்கள், நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலை நயத்தோடு வடிவமைக் கப்பட்டு, சமீபத்தில் வெள்ளோட்டம் நடத்தப் பட்டது.
இதனைத்தொடர்ந்து, 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்க ளிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரட்டைத் தேரோட்டத்தில், பல்வேறு பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை முழங்க சேர்வையாட்டம் ஆடி கிராம மக்களும் பக்தர்களும் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். இன்று 2 கிராம ராஜ வீதிகளிலும் பழமையான செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.






