என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.
மேட்டூர் அருகே நூல் பாரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
- நூல் பேல்களை பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது.
- ஆர்.சி.பிளான்ட் அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் நோக்கி, நூல் பேல்களை பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் ஜெய்சங்கர் (வயது 40) ஓட்டி வந்தார்.
மேட்டூர் ஆர்.சி.பிளான்ட் அருகே லாரி வந்து கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ஜெய்சங்கர் காயங்களுடன் உயிர்தப்பி னார். இந்த விபத்து காரண மாக அந்த வழியாக சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






