என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி மாரியம்மன் இரட்டைத் தேரோட்டம்
  X

  கொட்டவாடியில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 

  கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி மாரியம்மன் இரட்டைத் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள.
  • 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்களிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஆகிய இரு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ள. இந்த இரு கிராம மக்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இரு கோவில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு, ஏறக்குறைய ரூ.50 லட்சம் செலவில் 2 புதிய மரத்தேர்கள், நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலை நயத்தோடு வடிவமைக் கப்பட்டு, சமீபத்தில் வெள்ளோட்டம் நடத்தப் பட்டது.

  இதனைத்தொடர்ந்து, 32 ஆண்டுகளுக்குப் பின், 2 மாரியம்மன் கோவில்க ளிலும் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரட்டைத் தேரோட்டத்தில், பல்வேறு பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை முழங்க சேர்வையாட்டம் ஆடி கிராம மக்களும் பக்தர்களும் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். இன்று 2 கிராம ராஜ வீதிகளிலும் பழமையான செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

  Next Story
  ×