என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வந்த ரெயிலில் 10 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
    X

    கஞ்சாவுடன் கைதானவர்களையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம். 

    சேலம் வந்த ரெயிலில் 10 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

    • சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரு கன், ஏட்டு பாலசுப்பிர மணியன் மற்றும் போலீசார் முனுசாமி, அசோக்குமார் ஆகியோர் சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    கருப்பூர்ரெயில் நிலையம் அருகே ரெயில் பொது பெட்டியில் சோதனை நடத்தியதில் 5 கிலோ கஞ்சா வுடன் வந்த ஒடிசாவை சேர்ந்த படல் பெஹ்ரா (வயது22) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் ஒடிசா மாநிலம் பலாங்கீர் என்ற ரெயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருந்தார். ஈரோடு சென்று அங்கிருந்து பழனிக்கு செல்வதாக அவர் தெரி வித்தார். மேலும் அவரது செல்போனை போலீசார் சோதனை செய்த தில் அதில் கஞ்சாவை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அதே ரெயிலில் வந்த சேலம் மாவட்டம் தெற்கு நாடு ஊராட்சி சின்னகல்வ ராயன் மலை கீரை கடை பகுதியை சேர்ந்த சடையன் (51) என்பவரையும் மடக்கி பிடித்தனர். அவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தார். கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சடையன் ஆந்திரா மாநிலம் விசா கப்பட்டினம் சென்று கஞ்சாவை வாங்கி சேலத்தில் விற்க வந்ததாக தெரி வித்தார். கைதான 2 பேரிடம் இருந்தும் தலா 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×