என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமடுவு அணை,  கரியக்கோவில் அணைகளில்30 ஆண்டாக கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான எந்திரங்கள்
    X

    வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான எந்திரங்கள் மற்றும் வாகனங்கள்.

    ஆனைமடுவு அணை, கரியக்கோவில் அணைகளில்30 ஆண்டாக கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான எந்திரங்கள்

    • கரியக் கோவில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 1982–-ம் ஆண்டு கரியக்கோவில் அணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • இந்த அணையானது 53 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் ஏறக்குறைய ரூ.12 கோடி செலவில் கடந்த 1993–-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்ராயன் மலையின் வடமேற்கு பகுதியில் உற்பத்தியாகும் கரியக் கோவில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 1982–-ம் ஆண்டு கரியக்கோவில் அணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த அணையானது 53 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் ஏறக்குறைய ரூ.12 கோடி செலவில் கடந்த 1993–-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    இதே போல் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில் 67 அடி உயரத்தில் 263 மில்லியன் கனஅடி தேங்கும் விதத்தில் ஆனைமடுவு அணை கட்டப்பட்டது.

    இரு அணைகளின் கட்டு மானப் பணிகளுக்கும் தமிழகத்தில் ஆழியாறு அணை, பாப்பிரெட்டிப்

    பட்டி வாணியாறு அணை, ஓசூர் கலவரப்பள்ளி அணைகள் உள்ளிட்ட பல்வேறு அணைகளின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலர்கள், சிமெண்ட் கான்கீரிட் மிக்ஸர் எந்திரங்கள், லாரிகள், கம்ப்ரஸ்சர்கள் உள்ளிட்ட எந்திரங்கள், வாகனங்கள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

    கடந்த 1982 முதல்

    1993–-ம் ஆண்டு வரை கரியக்கோவில் மற்றும் ஆனைமடுவு அணையின் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பழைய கட்டுமான எந்திரங்களும், வாகனங்களும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து போய் விட்டன. இந்த வாகனங்களையும் எந்திரங்களையும் பழுதுநீக்கி பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், இவற்றை பராமரிக்காமல் விட்டு விட்டனர்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இரு அணைகளின் முகப்பிலும் நின்று கிடக்கும் லாரிகள், ரோடு ரோலர்கள், கம்பரஸ்சர்கள், சிமெண்ட் கான்கீரிட் மிக்ஸர் உள்ளிட்ட எந்திரங்களும், பழைய வாகனங்களும் கேட்பாரற்று துருபிடித்து மண்ணாகி வருகின்றன.

    துருபிடித்து கிடக்கும் கட்டுமான எந்திரங்களையும் வாகனங்களையும், பார்வையிட்டு மதிப்பீடு தயார் செய்து ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, அணை களின் முகப்பும் பொலிவு பெறும்.

    எனவே, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளில் கடந்த 30 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான எந்திரங்கள் மற்றும் வாகனங்களை ஏலம் விட்டு அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரி கள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×