அரசு கிளை அச்சகங்களில்பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்

“ சென்னை, மதுரை மற்றும்‌ திருச்சி அரசு கிளை அச்சகங்களில்‌ தற்போது துணை விற்பனை நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன.அரசு கிளை அச்சகங்களில்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்ய விண்ணப் பிக்கும்‌ வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அரசு கிளை அச்சகங்களில்பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்
Published on

சேலம்:

தமிழக சட்டசபையில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சர் பேசுகையில், " சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படு வதற்காக பொதுமக்களின் விருப்பத்திண்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு கடந்த 13-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com