என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்கியில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது
- சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புதுவளவு, மணியாரகுண்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 34), இவர் தனது மனைவி பார்வதியுடன் கருமந்துறையில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க, 60 ஆயிரம் பணத்துடன் வங்கிக்கு சென்றார். சலானை பூர்த்தி செய்தபோது பணத்தை பர்சுடன் அருகே வைத்தார். சலானை, மேலாளரிடம் கொடுத்து விட்டு வந்தபோது, பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் கொடுத்த புகார்படி, கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தியதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சூலாங்குறிச்சியை சேர்ந்த கனகராஜ், (30) என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் பணத்தை மீட்டனர்.
Next Story






