என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கணாபுரம்அதிர்ஷ்ட லட்சுமி கோவிலில் அட்சய வாசல் திறப்பு

    • எட்டிக்குட்டை மேடு பகுதியில் பிரசித்தி பெற்ற அதிர்ஷ்ட லட்சுமி ஆலயம் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் அட்சய திருதியையை முன்னிட்டு இன்று காலை அட்சய வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே எட்டிக்குட்டை மேடு பகுதியில் பிரசித்தி பெற்ற அதிர்ஷ்ட லட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியையை முன்னிட்டு இன்று காலை அட்சய வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக ஆதிலட்சுமி அம்மனுக்கு 1008 வலம்புரி சங்கு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து லட்சுமி அழைப்பு நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிளக் நடைபெற்றது.

    பின்னர் அட்சய வாசல் திறக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மலர் சப்புரத்தில் ஆதிமகாலட்சுமி தாயார் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    யாக சாலையில் தண்டபாணி சுவாமிகள் தலைமையிலான ஸ்ரீரங்கம் பட்டாச்சாரியார்கள் சிறப்பு அக்ஷய வேள்வி பூஜை நடத்தி, பக்தர்களுக்கு கோமதி சக்கர பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×