என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
மலைப்பாதையில் கார் கவிழ்ந்து ஏட்டு உள்பட 4 பேர் படுகாயம்
- பாலமுருகன் (வயது 32). இவரும், குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஏற்காடு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (வயது 32). இவரும், குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று காரில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, மாலை அனைவரும் மீண்டும் காரில் குப்பனூர் மலைப்பாதை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பாறை ஒன்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் ஏட்டு பாலமுருகன், அவரது மைத்துனர் தங்க ராஜ், மனைவி கவிதா, கார் டிரைவர் ஜெயமுருகன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






