என் மலர்
உள்ளூர் செய்திகள்

காசோலையை, நகர மன்ற தலைவி நிர்மலா பப்பிதா மணிகண்டன் வழங்கிய காட்சி.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த ஆத்தூர் மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கல்
- கல்லூரி மாணவரான பிரவீன், நண்பர்களோடு நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கிராமத்தில் உள்ள படுகை அணைப் பகுதிக்கு குளிக்க சென்றார்.
- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த கல்லூரி மாண வரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த தோடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகு தியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவரான பிரவீன், நண்பர்களோடு நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கிராமத்தில் உள்ள படுகை அணைப் பகுதிக்கு குளிக்க சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரி ழந்தார். இதையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த கல்லூரி மாண வரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த தோடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியி லிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் நகர மன்ற தலைவர் நிர்மலா பப்பிதா உள்ளிட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரவீனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். பின்னர், முதல்-அமைச்சர் அறிவித்த 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை யினை அவரது பெற்றோரி டம் வழங்கினர். அப்போது நகர மன்ற உறுப்பினர் வக்கீல் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






