என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காபி பாரை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது
    X

    காபி பாரை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது

    • முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் குகை பிரபாத் அருகே உள்ள ஒரு காபி பாரில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது கடைக்கு கிச்சிப்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவிக்கு மார் (29) என்பவர் வந்தார்.

    அவர் முருகனிடம் பணம் கேட்டுள்ளார். முருகன் பணம் தர மறுத்த தால் ரவிக்குமார் கடையிலிருந்து டீ பாய்லர்,பிஸ்கட் வைத்துள்ள கண்ணாடி ஜார்கள்,மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    இது குறித்து முருகன் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×