என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden fire in a truck லாரியில் திடீர் தீ"

    • கொளத் தூர் அருகே கத்திரிப்பட்டி கிராமத்தின் வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில், திடீரென வைக்கோலில் தீ பற்றியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கத்திரிப்பட்டி கிராமத்தின் வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில், திடீரென வைக்கோலில் தீ பற்றியது. இந்த தீ மளமள வென பரவியது. இதை யடுத்து, மினி லாரியின் டிரைவர், லாரியில் இருந்தவர்கள் வேகமாக கீழே இறங்கினர்.

    இதுகுறித்து மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். கிராம மக்கள் உதவியுடன், வீரர்கள் தீயை அணைத்த னர். இந்த தீ விபத்தில் லாரியுடன், வைக்கோலும் எரிந்து அடைந்தது. இது குறித்து கொளத்தூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×