search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lockout"

    • மேட்டூர் அணை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் வருகிற 20-ம் தேதி ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
    • இந்த கதவடைப்பு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் தொழிற் பேட்டை யில் 200-க்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது மின்வாரியத்தில் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சகட்டணம் ரூ35 என்பதை ரூ150 என உயர்த்தப்பட்டுள்ளது.

    உச்ச பட்ச பயன்பாடு நேரம் என்பதை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் பயன்படுத்தப்படும் மின்

    கட்டணத்திற்கு 25 சதவீ தம் மின்கட்டணம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வையும் குறைந்தபட்ச மின் கட்டண உயர்வையும் முழுமையாக மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும் . தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் தொழிற் பேட்டையில் உள்ள நிலங்களை தொழில் முனைவோருக்கு 40 ஆண்டு காலம் குத்தகைக்கு விடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூர் அணை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் வருகிற 20-ம் தேதி ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மேட்டூர் அணை சிறு தொழில் அதிபர்கள் சங்க தலைவர் மாதப்பன் தெரிவித்துள்ளார், இந்த கதவடைப்பு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது.

    ×