என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive care with police protection"

    • திருப்பூரில் பணியாற்றிய போது அரிய லுார் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை சேர்ந்த வர் அனுஷியா (25) என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
    • இவர்களது திருமணத்துக்கு சுபாசின் தந்தை தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி பகு தியை சேர்ந்த வர் தண்ட பாணி (வயது50). தொழி லாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகன் சுபாஷ் (25 ) எம்.பி.ஏ பட்டதாரி.இவர் திருப்பூரில் பணியாற்றிய போது அரிய லுார் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை சேர்ந்த வர் அனுஷியா (25) என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது திருமணத்துக்கு சுபாசின் தந்தை தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சுபாஷ் அருண பதியில் உள்ள தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டுக்கு தனது மனை வியை அழைத்து வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனை வரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். மறுநாள் அதிகாலையில் தண்டபாணி தனது மகனை அரிவாளல் கொடூரமாக வெட்டி ஆணவ கொலை செய்தார். தடுத்த தனது தாய் கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் மருமகள் அனுசி யாவை துரத்திச் சென்று கழுத்து, முகம் கை என தண்டபாணி கண்மூ டித்தன மாக வெட்டினார். உடல் முழுக்க ரத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்த அனுசியா வீட்டின் முன்பு மயங்கி விழுந்தார்.

    பலத்த காயம டைந்த அனுஷியா ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சை பெற்று வரும் அனு ஷியா விடம், சேலம் நீதிமன்றம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா நேற்று வாக்குமூலம் பெற்றார்.

    இந்த நிலையில் அனுஷி யாவிற்கு போலீஸ் பாதுகாப்பு டன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ற னர்.

    ×