என் மலர்tooltip icon

    சேலம்

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பா ளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீனா வின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் காளிகவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தீனா (வயது 17). இவர் மேள கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பா ளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீனா வின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
    • இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

    சேலம்:

    சேலம்-விருத்தாசலம் ரெயில்வே மார்க்கத்தில் உள்ள காரிப்பட்டி ரெயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதைந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் மின்னாம்பள்ளி அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவிபாரதி (வயது 24) என்று தெரிய வந்தது. சேலம் 4 ரோட்டில் உள்ள காளான் கடையில் இவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், அதிகாலையில் அவ்வழியே வந்த விருத்தாச்சலம் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    தற்கொலை செய்த கவிபாரதி 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் 'நான் எனது கிருஷ்ணனை பார்க்க செல்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி யாரும் வேதனைப்பட வேண்டாம். பக்தியால் முக்தியடைய நினைத்தேன். நிறைய நாள் ஆகும் போல இருக்கு. அதனால் தான், இந்த வழியை முடிவு செய்தேன், என குறிப்பிட்டு ஸ்ரீ ராம ராம என பாடலை எழுதியுள்ளார்.

    அரசாங்கத்திற்கு என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில், எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டுகொள்கிறேன். எனது குடும்ப மிகவும் வறுமையிலும், கடன் தொலையிலும் மிக மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது, என்றும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கவிபாரதி உடல்நிலை சரியில்லாத தனது தாய், தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால், இனிவாழ வேண்டாம் என முடிவெடுத்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    • பெங்களூரில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றி வந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட் டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றி வந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட் டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    • வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாஸ்க ரன் உத்தரவின்பேரில், மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்திற்கு உரிய வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட

    7 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    நேற்று, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 4,489 கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.53 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.70 அடியாக உயர்ந்தது.

    • கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்

    சேலம்:

    சேலம் குகை ஆறுமு கப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் பாலாஜி சுப்பிர மணியன் (வயது 40). இவர் கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி சுப்பிர மணியன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரில் சேலம் டவுனில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்
    • நள்ளிரவு 1 மணிக்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார்

    சேலம்:

    கேரளா மாநிலம் திருச்சூர் அருேக உள்ள திருவாயூர் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவருடைய மகன் தீபக் கோவிந்த் (வயது 22). இவர், சேலம் மாவட்டம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காரில் சேலம் டவுனில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன்புறம் உள்ள மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதியது. இதில் தீபக் கோவிந்த், பலத்த அடிபட்டு காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூலகப்பணியில் 35 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு
    • ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாைணயம் ஒருங்கிணைந்த நூலகப்பணியில் 35 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஒருங்கிணைந்த நூலக பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக கணினி வழி தேர்வானது, நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளான நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை -2 க்கு நாளை (13-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நூலக பாட தேர்வும், மதியம் 2.30 மணிக்கு பொது அறிவு மற்றும் தமிழ் தகுதித்தேர்வும் நடைபெறுகிறது.

    அதேபோல் கல்லூரி நூலகர், நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் பணிக்கு 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு நடைபெறுகிறது.இதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது டி.என்.பி.எஸ்.சி. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    • சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் கைதானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்த இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    பின்னர் அயோத்தியாப்பட்டணம் அருகில் உள்ள மாசிநாயக்கன்பட்டியில் தனது 2-வது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் எதிரே உள்ள சாக்கடை பள்ளத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று ரஞ்சித்தை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 27), சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி (30), சேலம் குகையை சேர்ந்த பிரியாணி மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் மதன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    • 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி
    • ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் பெற்றோரை இழந்த சிறுமி, உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் உரிய வயதை எட்டியவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் காதலனுடன் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்து தெரியவந்தது.இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் உறவினர்களிடம் டவுன் மகளிர் போலீசாரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சிறுமிக்கும், அவரது குழந்தைக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பிளஸ்-2 தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
    • சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதால் தனக்கு உயர் கல்வி சேர இயலவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுரேஷ்பாபு மகன் நந்தகுமார்(வயது 19). இவர் கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது நடைபெற்ற பொது தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இன்று தனது தாய் நதியாவுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், சாதி சான்றிதழ் விண்ணப்பித்து 15 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்றும் இதனால் உயர் கல்வி சேர்வதற்கு பிரச்சினையாக உள்ளது.

    அதேபோல் உயர் கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சாதி சான்றிதழ் கிடைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×