என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லூரியில் படித்த கேரளா மாணவர் விபத்தில் பலி
- காரில் சேலம் டவுனில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்
- நள்ளிரவு 1 மணிக்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார்
சேலம்:
கேரளா மாநிலம் திருச்சூர் அருேக உள்ள திருவாயூர் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவருடைய மகன் தீபக் கோவிந்த் (வயது 22). இவர், சேலம் மாவட்டம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காரில் சேலம் டவுனில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன்புறம் உள்ள மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதியது. இதில் தீபக் கோவிந்த், பலத்த அடிபட்டு காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






