என் மலர்
சேலம்
- டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மேட்டூர்:
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்பட 15 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220 நாள்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் திறக்கப்படும்.
மேட்டூர் அணையில் 90 ஆண்டுகால வரலாற்றில் முதன் முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் 12-ல் 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக 11 ஆண்டுகள் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிற ஆண்டுகள் தாமதமாகவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 90-வது ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 12-ல் மேட்டூர் அணை நீர்மட்டம் 107.2 அடியாகவும் நீர் இருப்பு 74 டிஎம்சியாகவும் இருந்தது. நீர்வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதேபோல் தற்போதும் நீர் இருப்பு திருப்பதிகரமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும், நீர் இருப்பு 69.98 டி.எம்.சி.யாகவும், நீர் வரத்து 3088 கன அடியாகவும் உள்ளது.
தற்போது டெல்டா பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தொடங்கிய தூர்வாரும் பணி நிறைவடைந்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது. தவறினால் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் 26 டிஎம்சி தண்ணீரும், கபினியில் 8.4 டிஎம்சி தண்ணீரும் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 13 டி.எம்.சி.யும், கபினியில் 4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே, நீர்வரத்து, நீர் இருப்பு பருவ மழையைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒருவார காலத்தில் தண்ணீர் திறக்கும் தேதியை நீர் வளத்துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.
- சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது.
- இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது. இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை. தடுப்பூசி போட்டதன் விளைவாக கோரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
சேலம்:
சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வனச்சரக அலுவலர் முரளிதரன் பேசியதாவது:-
வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. வன உயி ரினங்கள் வாழும் இடங்க ளில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது.
அதே போல் வனத்துக்குள் அன்னியர்கள் நுழையக்கூடாது. வனத்தை பாதுகாத்தால் தான் பருவ மழை சரியாக பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். கிராம வன குழுவினர், வன பணியாளர்கள் பங்கேற்றனர்.
- அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31).
- பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
சேலம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31). இவர் கூட்டாத்துப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அவர் அரளி விதை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
- இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க ழகத்தின் இணைப்பு அங்கீ காரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியா ழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது. தொடர்ந்து 4-வது பரு வத்துக்கான (இறுதிப் பருவம்) எழுத்துத்தேர்வு களை ஜூன் 2-வது வாரத்தில் நடத்த திட்ட மிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.
இறுதி பருவத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணை பல்க லைக்கழக தேர்வுத் துறை யால் விரைவில் வெளி யிடப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
- சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள்.
- வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை களை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள். இதையொட்டி அவர்கள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட்டுடன் இயக்கப்படுகிறதா? என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அபராதம்
அந்த வகையில் கடந்த மாதத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி சென்ற வாகனங்க ளுக்கும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, விதிமுறைகளை மீறி இயக்கிய 1,557 வாகனங்களிடம் இருந்து ரூ.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 56 லாரிகள், 20 ஆட்டோக்கள் உள்பட 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளதாக போக்கு வரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லைசென்ஸ் ரத்து
இதுதவிர, கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 31 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது.
- இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே நடுவலூர் வடக்கு கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 பெண் மயில்கள் இறந்து கிடந்தது. இது குறித்த தக வலின் பேரில், வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்து றையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அப்போது பக்கத்து தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள நிலை யில் பயிரை காப்பதற்காக சுற்றிலும் குருணை மருந்து வைத்திருந்ததும், அதனை சாப்பிட்டு மயில்கள் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக பரம சிவம் என்பவர் மீது வன குற்றவியல் பிரிவின்கீழ் வனத்துறையினர் வழக்குப்ப திவு செய்துள்ள னர். இதை யடுத்து, தலை மறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
- வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.
- விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம்:
ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி பி.எம். கிசான் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது.
இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயிகளுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார். இந் நிலையில் 14-வது தொகை மே மாதம் இறுதியில் விடுவிக்கப்படும் என தெரிகிறது. இந்த தொகையை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
- மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4,489 கன அடியாக குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 5,253 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4,489 கன அடியாக குறைந்தது.
தொடர்ந்து இன்றும் நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 3,702 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.70 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.82 அடியாக உயர்ந்தது.
- ஏற்காடு ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
- குழுவாக வந்திருந்த பயணிகள் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் குதூகலமாக சவாரி செய்தனர்.
ஏற்காடு:
கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த வண்ண உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா, பக்கோடா பாய்ண்ட், அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இங்கு பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் இங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்டவைகளில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
ஏற்காடு ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால், படகு குலாம் களை கட்டியது. குழுவாக வந்திருந்த பயணிகள் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் குதூகலமாக சவாரி செய்தனர். மேலும், மிதி படகு, பெடல் படகுகளில் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருந்து, சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோடை விழாவையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். இது மட்டுமின்றி உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக அண்ணா பூங்கா விளங்கி வருகிறது. மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள இருக்கைகள், ஊஞ்சல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்திலும் தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.
- நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
- அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
சேலம்:
சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக வெளியே வராமல் வீட்டின் படுக்கையிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரண மாக இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் தனது தாய் ராஜேஸ்வரி உடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது உமாசங்கர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.
உமா சங்கரின் உடலை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரில் முதற்கட்ட விசாரணையில், உமாசங்கர் கடந்த 2 நாட்களாக வெளியே வராமல் வீட்டின் படுக்கையிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மகன் இறந்தது கூட தெரியாமல் கடந்த 2 நாட்களாக ராஜேஸ்வரி வீட்டில் இருந்தது அந்தப் பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.






