சேலம் அருகே பரிதாபம் விஷம் தின்று பேக்கரி ஊழியர் தற்கொலை

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31).பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
சேலம் அருகே பரிதாபம் விஷம் தின்று பேக்கரி ஊழியர் தற்கொலை
Published on

சேலம்:

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31). இவர் கூட்டாத்துப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் அரளி விதை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com