என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் தடை"
- சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.
- அரசு விழாக்களில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
கேரள மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது.
தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் டம்ளர்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.
தேக்கடி, வாகமண், அதிரப்பள்ளி, சாலக்குடி, நெல்லியம்பதி, பூக்கோடு ஏரி-வைத்திரி, வயநாட்டில் உள்ள கர்லாட் ஏரி, அம்பலவயல், வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகிய சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.
சுற்றுலா தலங்கள் தவிர கேரளா முழுவதும் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், அனைத்து அதிகாரப்பூர்வ மத்திய மற்றும் மாநில அரசு விழாக்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
சேலம்:
சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வனச்சரக அலுவலர் முரளிதரன் பேசியதாவது:-
வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. வன உயி ரினங்கள் வாழும் இடங்க ளில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது.
அதே போல் வனத்துக்குள் அன்னியர்கள் நுழையக்கூடாது. வனத்தை பாதுகாத்தால் தான் பருவ மழை சரியாக பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். கிராம வன குழுவினர், வன பணியாளர்கள் பங்கேற்றனர்.






