என் மலர்tooltip icon

    சேலம்

    • பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ம் நிதியாண்டி ற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

    சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவைமாட்டுக் கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேம்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் (ஆதார் எண் அவசியம்), சுய உதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிட சான்றிதழ் நகல்கள், முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்பஅட்டை / ஆதார் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

    கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகததில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    சேலம்:

    சங்ககிரியில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமோதரன், அவரது மனைவி மாலதி மற்றும் 2 வயது குழந்தையுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • எனது கணவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு 2 கிட்னியும் செயல் இழந்து விட்டது. இதனால் எனது கணவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த தாமோதரன், அவரது மனைவி மாலதி மற்றும் 2 வயது குழந்தையுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளரிடம் தாமோதரன் மனைவி கூறும்தாவது:-

    எங்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எனது கணவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு 2 கிட்னியும் செயல் இழந்து விட்டது. இதனால் எனது கணவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார். கனவருக்கு மாற்று கிட்னி அமைக்க எனது கிட்னி பொருந்தாது என மருத்துவர் தெரிவித்து விட்டார். இதனால் எனது கணவருக்கு கிட்னி கிடைக்காமல் அவதிபட்டு வருவதாகவும் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் தயவு கூர்ந்து, எனது கணவருக்கு கிட்னி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொருளா தாரத்திற்கு உதவி புரிய வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
    • இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கவியரசு வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் மணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பணிக்கு தற்போது அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் 15 பேர் தேர்வாகி உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். குறிப்பாக போட்டி தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஒருவர் காவல் துறையில் சேர்ந்து அஸ்தம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனவே, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக மேட்டூர் விளங்கி வருகிறது.
    • இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக மேட்டூர் விளங்கி வருகிறது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று மேட்டூரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே காவிரி ஆற்றில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஆனந்தமாக குளித்தனர். பின்னர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று, பொழுதை கழித்தனர். மேலும் அங்கு குடும்பத்தினர், நண்பர்களுடன் தாங்கள் கொண்டு வந்த உணவை சுவைத்தனர்.

    சிறுவர்-சிறுமிகள்

    பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் உற்சாகமாக விளையாடினர். சிலர் வலதுகரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்துக்கு சென்று, அணையின் முழு தோற்றத்தை கண்டு ரசித்தனர்.

    மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூங்கா மற்றும் பவள விழா நுழைவு கட்டணமாக நேற்று ஒரே நாளில் ரூ.79 ஆயிரத்து 855 வசூல் ஆனது.

    மேலும் ஓட்டல்கள், மீன் கடைகள் மற்றும் சாலையோர மீன் வறுவல் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வரவால் மேட்டூர் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • ராஜவேலு (வயது 34). இவர், ஈரோட்டில் போலீஸ் காரராக பணியாற்றி வருகிறார்.
    • போலீஸ்காரர் ராஜவேலுவின் தலையில் ஒரு வாலிபர் காலால் மிதித்து விட்டதாகவும், இதனால் அந்த வாலிபரை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கே.சி.பி. நகரை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 34). இவர், ஈரோட்டில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 11-ந் தேதி ஜோலார்பேட்டையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயிலில் சென்றார். அந்த ரெயில், சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது, போலீஸ்காரர் ராஜவேலுவின் தலையில் ஒரு வாலிபர் காலால் மிதித்து விட்டதாகவும், இதனால் அந்த வாலிபரை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பொம்மிடி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது, அங்கு மேலும் 3 பேர் ஏறினர்.

    தாக்குதல்

    பின்னர் அவர்கள் போலீஸ்காரர் ராஜவேலுவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரும் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரெயிலில் இருந்த சக பயணிகள், ராஜவேலுவை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், ஓடும் ரெயிலில் போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியது, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (29), சக்தி சரவணன் (24), பாலமுரளி, உதயகுமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் ஆபாசமாக பேசி தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வெங்கடேஷ், சக்தி சரவணன் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலமுரளி, உதயகுமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.
    • எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறிருப்பதாவது:-

    நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை சென்னை பாரி முனையில் உள்ள தேர்வா ணைய அலுவலகத்தில் வரு கிற 23-ம் தேதி நடைபெற வுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.
    • 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.

    இந்நிலையில் நாராயண புரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு. 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்லைன் பழுத டைந்து. பைப்லைன் சரி செய்யாமல் காலம் தாமதம் செய்ததால். தண்ணீர் வீணாக அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்லுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பைப் லைனை சரி செய்து மக்களுக்கு தேவையான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக் கைக்கு நடவ டிக்கை எடுக்க வில்லை என்றால் சாலை மறியல் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த முட்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் தீபா (வயது 28). இவருக்கும், நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்கள் பிரிந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தீபா, சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கவுதமன், திடீரென தீபாவை சரமாரியாக தாக்கினார். வலியால் துடித்த அவர் அங்கிருந்து வெளியேறி அருகே இருந்த வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் கவுதமன் அவரை துரத்தி சென்று தாக்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடை ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் அதற்கு தகுந்தார் போல் புதிய நகையை கொடுத்தனர்.
    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையப் பகுதியில் ஒரு பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது இந்த நகைக் கடைக்கு நேற்று மாலை பெண் ஒருவர் வந்தார், பின்னர் அவர் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்க வந்திருப்பதாக கூறி 6 பவுன் எடை கொண்ட கவரிங் நகையை கொடுத்தார்.

    ஆனால் கடை ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் அதற்கு தகுந்தார் போல் புதிய நகையை கொடுத்தனர் அந்தப் பெண் நகையை வாங்கிவிட்டு வெளியில் சென்றதும் அவர் கொடுத்த நகையை மீண்டும் கடை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அவர் கொடுத்தது கவரிங் நகை என்பது உறுதி செய்யப்பட்டது பின்னர் அவரை கடைக்கு வெளியில் சென்று தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதை அடுத்து கடையில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவரிங் நகைகளை கொடுத்து புதிய நகையை வாங்கிச் சென்ற அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடையூர் அடுத்த நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் குடிபோதையில் நடுவூரிலிருந்து கொளகூர் செல்லும் மலைப்பாதையில் வளைவில் உள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென மணி பின்னால் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளத்தில் இருந்து மணியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொது மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்குமார் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தாய் வசந்தி வீட்டிலேயே பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மகுடஞ்சாவடி:

    சேலம், மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசி (வயது 33). இவர் மகுடஞ்சாவடியில் உள்ள தாய் வசந்தி வீட்டிற்கு திருவிழாவிற்காக கடந்த வாரம் வந்திருந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி கடந்த 13-ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே இளவரசிக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் அருகே உள்ள மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளவரசி உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் இளவரசிக்கு திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகின்றன. தற்போது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, அவரது கள்ள காதலனுடன் ஏற்பட்ட தகாத உறவால் பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளவரசிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. கர்ப்பமான மகளுக்கு வலி அதிகமானதால் அவரது தாய் வசந்தி வீட்டிலேயே பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றர்.

    ×