என் மலர்
உள்ளூர் செய்திகள்

நில அளவர்-வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
- நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.
- எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறிருப்பதாவது:-
நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை சென்னை பாரி முனையில் உள்ள தேர்வா ணைய அலுவலகத்தில் வரு கிற 23-ம் தேதி நடைபெற வுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






