என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Certificate Verification"

    • தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்) (அறிவிக்கை எண்.07/2025, நாள்.25.04.2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் 2210.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 08.12.2025 முதல் 18.12.2025 வரை (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நீங்கலாக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.
    • எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறிருப்பதாவது:-

    நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை சென்னை பாரி முனையில் உள்ள தேர்வா ணைய அலுவலகத்தில் வரு கிற 23-ம் தேதி நடைபெற வுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
    • 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.

    நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ந் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22, 23, 24 கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி திறக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×