என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீட்டிலேயே குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற இளம்பெண் பலி- போலீஸ் தீவிர விசாரணை
- மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய் வசந்தி வீட்டிலேயே பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகுடஞ்சாவடி:
சேலம், மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசி (வயது 33). இவர் மகுடஞ்சாவடியில் உள்ள தாய் வசந்தி வீட்டிற்கு திருவிழாவிற்காக கடந்த வாரம் வந்திருந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி கடந்த 13-ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே இளவரசிக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் அருகே உள்ள மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளவரசி உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் இளவரசிக்கு திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகின்றன. தற்போது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, அவரது கள்ள காதலனுடன் ஏற்பட்ட தகாத உறவால் பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளவரசிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. கர்ப்பமான மகளுக்கு வலி அதிகமானதால் அவரது தாய் வசந்தி வீட்டிலேயே பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றர்.






