என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கவரிங் நகை வைத்து புதிய நகை வாங்கி ரூ.2.5 லட்சம் மோசடி
- கடை ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் அதற்கு தகுந்தார் போல் புதிய நகையை கொடுத்தனர்.
- கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையப் பகுதியில் ஒரு பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது இந்த நகைக் கடைக்கு நேற்று மாலை பெண் ஒருவர் வந்தார், பின்னர் அவர் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்க வந்திருப்பதாக கூறி 6 பவுன் எடை கொண்ட கவரிங் நகையை கொடுத்தார்.
ஆனால் கடை ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் அதற்கு தகுந்தார் போல் புதிய நகையை கொடுத்தனர் அந்தப் பெண் நகையை வாங்கிவிட்டு வெளியில் சென்றதும் அவர் கொடுத்த நகையை மீண்டும் கடை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் கொடுத்தது கவரிங் நகை என்பது உறுதி செய்யப்பட்டது பின்னர் அவரை கடைக்கு வெளியில் சென்று தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதை அடுத்து கடையில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவரிங் நகைகளை கொடுத்து புதிய நகையை வாங்கிச் சென்ற அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






