search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் குடிபோதையில் விழுந்த வாலிபர்
    X

    ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் குடிபோதையில் விழுந்த வாலிபர்

    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடையூர் அடுத்த நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் குடிபோதையில் நடுவூரிலிருந்து கொளகூர் செல்லும் மலைப்பாதையில் வளைவில் உள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென மணி பின்னால் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளத்தில் இருந்து மணியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொது மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்குமார் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×